அரசியல்

“நீர் மேலாண்மையில் கோட்டை விட்ட அதிமுக அரசு” - திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு!

ஆட்சியில் இருப்பவர்களுக்கு நதிநீர் குறித்தும், பூகோள அறிவும், புரிதல் இல்லாதவர்கள் தேர்தலில் பணம் செலவழித்து வாக்குகளைப் பெற்று அமைச்சர்களாகிவிட்டனர்.

“நீர் மேலாண்மையில் கோட்டை விட்ட அதிமுக அரசு” - திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக நீர் மேலாண்மையில் எவ்வித வளர்ச்சியையும் ஏற்படுத்தாமல் அதிமுக அரசு மெத்தனமாக இருந்துள்ளதை சுட்டிக்காட்சியுள்ளார் தி.மு.க. செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

இது தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியான கட்டுரையின் விவரம் பின்வருமாறு:-

“பருவமழை காலக்கட்டத்தில் காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் வெள்ள நீரைச் சேமித்து அதைப் பயன்படுத்தக் கூடிய அளவில் நமக்கான திட்டங்கள் ஏதுமில்லாமல் உள்ளது. காவிரியில் வரும் தண்ணீர், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டு நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 17 லட்சம் ஏக்கர்களுக்கு விவசாயத்திற்குப் பயன்படுகின்றது.

மேலும் 15 மாவட்டங்களுக்கு குடிநீருக்கும் காவிரி நீர் பயன்பட்டு வருகிறது. டெல்டா பகுதியில் குறுவை மற்றும் சம்பா, தாளடி என மூன்று போகத்திற்கு காவிரித் தண்ணீர்தான் விவசாயத்திற்குக் கை கொடுக்கிறது. இதற்கு கிட்டத்தட்ட 340 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. காவிரி ஆற்றில் மட்டுமல்லாமல், ஏனைய பாலாறு, அமராவதி, வைகை, தாமிரபரணி போன்ற 17 நதிப்படுகைகளிலும் இதே நிலைமை தான். மழைக்காலங்களில் வெள்ளத்தால் வரும் தண்ணீரை கடலுக்குச் சென்றது போக ஓரளவிற்குச் சேமிக்கலாம். அதைச் சரியாகக் கவனிப்பதும் இல்லை.

“நீர் மேலாண்மையில் கோட்டை விட்ட அதிமுக அரசு” - திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு!

கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் கொள்ளிடத்தில் மட்டும் 227 டி.எம்.சி. தண்ணீர் வங்கக்கடலுக்குச் சென்றுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் மட்டுமல்ல, காவிரி ஆற்றில் ஒரு 20, 25 தடுப்பணைகள் கட்டலாம். ஆனால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு நதிநீர் குறித்தும், பூகோள அறிவும், புரிதல் இல்லாதவர்கள் தேர்தலில் பணம் செலவழித்து வாக்குகளைப் பெற்று அமைச்சர்களாகிவிட்டனர். வெள்ளம் வந்தாலும் அதைச் சேமித்து வைக்கத் தவறுகிறோம். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது மாயனூர் அணையிலிருந்து நேராக கால்வாய் வெட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெள்ளக்காலங்களில் கொண்டு செல்லலாம்.

மாயனூரிலிருந்து மற்றொரு கால்வாய் வெட்டி தெற்கு நோக்கி சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லலாம். இதற்கான திட்டச்செலவு சுமார் 14 ஆயிரம் கோடி வரை ஆகும். வானம் பார்த்த சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் கிராமங்களுக்கு இந்த வெள்ள நீர் பயன்படும். அதேபோல, கல்லணையில் வரும் வெள்ளத்தை கல்லணை கால்வாய் மூலமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வரை கொண்டு செல்லலாம். கல்லணைத் தண்ணீரை வீராணம் ஏரியில் செலுத்தி சென்னைக்கு குடிநீருக்கும் பயன்படும்.

காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணாற்றுப்படுகையில் புதிய நீர்நிலைகளை அமைத்து வெள்ளநீரை சேமிக்கலாம். மேட்டூர் அணை நிரம்பினால் மாயனூர், முக்கொம்பு, கல்லணையில் இந்த நீரை சேமிக்கலாம் என்றாலும் விரிவான காவிரி ஆற்றை பற்றி முழுமையாக புரிதல் இல்லாத அரசு காவிரியை பாதுகாக்கவும், அதன் தண்ணீர் நிர்வாகத்தை சீர்படுத்தவும் எல்லோரும் இணைந்தால் மட்டுமே முடியும். இது பொது அறிவான விஷயமாகும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வருவோம் என்று 10 ஆண்டுகளாக ஆளும் அரசு கூறிவருகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால், மாநிலத்தின் பொருளாதாரம் உயரும் என்கிற தொலைநோக்கு சிந்தனை இல்லாமல் இருப்பதால் மத்திய அரசு நிதிக்கு காத்திருக்கிறோம். இந்த திட்டம் முழுமையாக செயல்படும் பட்சத்தில் தமிழகத்தில் பாசன பயிரிடும் ஏக்கரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து அதன் மூலம் வெள்ளமாக வந்த 70 டி.எம்.சி தண்ணீர் வீணாக வங்கக்கடலில் சென்றுவிட்டது. இதை பாதுக்காக்கவும் தடுத்து நிறுத்தவும் தடுப்பணைகள் இல்லாமல் இருப்பதுதான் காரணம். முல்லை பெரியாறு, காவிரி, சிறுவாணி, பாலாறு போன்ற நதிகளில் 10 முதல் 20 டி.எம்.சி தண்ணீருக்கே போராடுகிறோம்.

ஆனால் தாமிரபரணியில் 70 டி.எம்.சி. தண்ணீர் விரயம் ஆகிவிட்டது. சரியான திட்டங்கள் இல்லை. அரிநாயகி புரம்மானூர் கால்வாயை செப்பனிட்டு இருக்கலாம். அது நடைமுறைப்படுத்தவில்லை. அப்படி செப்பனிட்டு இருந்தால் மானூர்குளம் நிரம்பி குங்களூர் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீரைக் கொண்டு சென்று இருக்கலாம். அதுமட்டுமல்ல? வைகுண்டம் சாத்தாகுளம், சடையநேரி வாய்க்கால் பழுது பார்த்திருந்தாலோ அல்லது மருதூர் மேல்கால் பெருங்குளம் ஆறுமுக மங்கலம் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த வெள்ள நீரை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

அதுமட்டுமல்ல பல குளங்கள், நீர்நிலைகள் குறிப்பாக கடப்பாகுளம், பெருங்குளம் 50க்கு மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்படவில்லை. இன்றைக்கு வீணாய்போன 70 டி.எம்.சி தண்ணீரால், 50 ஆயிரம் ஏக்கர் திருநெல்வேலி நகரத்தின் கீழ் பகுதி வட்டாரத்தில் தூத்துக்குடி மாவட்டம் பலம் பெற்று இருக்கும். இதற்கு மத்தியில் தாமிரபரணி விளாத்திகுளம் அருகே உள்ளவைப்பாறு, இணைக்கும் திட்டத்தையும் தமிழக அரசு அடிக்கல் நாட்டியது. இருப்பினும் சரியாக பாதுகாக்கப்படாத குறுகாணி, முக்காணி, வாழவல்லான் தடுப்பணைகள் இருந்தும் போதுமானதாக இல்லை. இந்த வெள்ளப்பெருக்கில் கிடைக்கும் தண்ணீரை திட்டமிடப்பட்ட தாமிரபரணி கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பிலும் பாதுகாத்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.

banner

Related Stories

Related Stories