அரசியல்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் கூட்டம் நடத்த அதிமுகவினருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? - திமுக MP

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் இந்தி மொழியிலேயே பெயர் வைத்து வருகின்றனர். இதனை அதிமுக அரசு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் வேடிக்கை பார்த்து வருகின்றது.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் கூட்டம் நடத்த அதிமுகவினருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? - திமுக MP
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தி மொழி தான் ஆட்சி மொழி என்று கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தமிழ் மொழியின் பெருமை கலாச்சாரத்தை குறித்து தமிழகத்துக்கு வந்த அவர் பேசி வருகிறார். இதே நிலை பிரதமர் மோடிக்கும் ஏற்படும் என திமுக எம்பி பழனிமாணிக்கம் பேச்சு.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக எம்.பி பழனிமாணிக்கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்:-

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்று வருகின்றது. தற்போது மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் இந்தி மொழியிலேயே பெயர் வைத்து வருகின்றனர். இதனை அதிமுக அரசு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் வேடிக்கை பார்த்து வருகின்றது.

இதேவேளையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருந்து இருந்தாலோ அல்லது தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் இருந்திருந்தால் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று எதிர்த்து இருந்திருப்பார். தமிழகத்திற்கு வந்த ராகுல் காந்தி இந்தி மொழிதான் ஆட்சி மொழி என்று கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் தற்போது தமிழ் மொழி கலாச்சாரம் அதன் பெருமை குறித்து பேசி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இதேநிலை மோடிக்கும் ஏற்படும் அப்படி அவருக்கு அந்த நிலை ஏற்படும் வேண்டுமென்றால் தமிழக மக்கள்தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பேசினார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொருப்பாளர் செல்ல பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு மற்றும் மாவட்ட மாநில ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

banner

Related Stories

Related Stories