அரசியல்

ஜெ.நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் கட்சி கரை சேலையில் வர வற்புறுத்தல் - அதிமுக அராஜகம்!

ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு ராணி மேரி உள்ளிட்ட கல்லூரி மாணவிகளை அதிமுக கரை சேலையில் வரும்படி அதிமுக அராஜகம்

ஜெ.நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் கட்சி கரை சேலையில் வர வற்புறுத்தல் - அதிமுக அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் கட்டும் பணியை கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது.

சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடம் வருகிற ஜனவரி 27ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. ஆனால், நினைவிடத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கொடுக்காமல் பொதுப்பணித்துறை அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஜெ.நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் கட்சி கரை சேலையில் வர வற்புறுத்தல் - அதிமுக அராஜகம்!

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் கட்டாயம் வர வேண்டும் என அதிமுக அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. அதன்படி, காயிதே மில்லத், ராணி மேரி, பாரதி கல்லூரி பேராசியர்களுக்கு தத்தம் கல்லூரிகள் சார்பில் காணொலி மூலம் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, 27ம் தேதியன்று கல்லூரி மாணவ மாணவியர்கள் அதிமுக கரை கொண்ட வேட்டி, சேலை கட்டாயம் அணிந்து வரவேண்டும் எனவும் அதற்கான உடைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை அதிமுக ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தும் செயலுக்கு கல்வியாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories