அரசியல்

“தெரியாம திருடுங்க... 80 லட்சம் கருப்பு பணம்” - MGR சொன்ன தூய ஆட்சி இது தான்!

எம்.ஜி.ஆர்-யை விட்டு வெளியே வந்த அப்போதைய அ.தி.மு.க அமைச்சர் எஸ்.டி.எஸ் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்துமே, எம்.ஜி.ஆர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மட்டும் தான்.

“தெரியாம திருடுங்க... 80 லட்சம் கருப்பு பணம்” - MGR சொன்ன தூய ஆட்சி இது தான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழகம் தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் பொதுவாக தாங்கள் செய்ததையும், செய்யவிருப்பதையும் கூறி மக்களிடம் வாக்கு கேட்பது வழக்கம். ஆனால், எதுவும் செய்யாத அ.தி.மு.க, எதற்கும் ஆகாத பா.ஜ.க, என்ன செய்ய என்றே தெரியாத ம.நி.ம என ஒரு கூட்டமே எம்.ஜி.ஆர்-ஐ வைத்து வித்தைக் காட்டி பிழைக்க நினைக்கின்றன. எம்.ஜி.ஆர் போன்ற ’தூய ஆட்சியை’ கொடுப்பது தான் தங்கள் லட்சியம் என்கின்றனர்.

அப்படி என்ன எம்.ஜி.ஆர் தூய ஆட்சியை கொடுத்துவிட்டார் என்று சற்று அலசி ஆராய்ந்தால், வண்டவாளம் தண்டவாளம் ஏறுகின்றது. எம்.ஜி.ஆர்-ஐ ஆட்சியில் அமைச்சராக இருந்த அ.தி.மு.க அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் சொன்ன குற்றச்சாட்டுகளே இதற்கு ஆவணம். எஸ்.டி.எஸ் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே, எம்.ஜி.ஆர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்.

குறிப்பாக எம்.ஜி.ஆர் சில சாராய கம்பெனிகளுக்கு ஆதரவாக, செயல்பட சொல்வதாகவும், அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கித்தர மறுத்ததால் தன்னை இலாகா மாற்றினார் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, எம்.ஜி.ஆர் 80 லட்சம் ரூபாய் பணத்தை வருமான வரித்துறையிடம் ஏன் செலுத்தினார், எப்படி செலுத்தினார் என்ற கேள்வியையும் எஸ்.டி.எஸ் பொது வெளியில் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பியுள்ளார். மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் “ உங்கள நான் திருட வேணானு சொல்லல, ஆனா தெரியாம திருடுங்கன்னு தான் சொல்றேன்” என்று கூறியதாகவும் செய்தியாளர் சந்திப்பில் போட்டு உடைத்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் பொது வெளியில் அறிவிக்கும் போது, எஸ்.டி.எஸ் எம்.ஜி.ஆர்-ன் அமைச்சரவையில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தூய ஆட்சி எப்படி இருந்தது என்பதை ‘இப்படி பாருங்க’ நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் திருமாவேலன் விளக்கி பேசியுள்ளார். அந்த முழுவீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories