அரசியல்

“ஆட்டுச் சந்தை அரசியலில் ஈடுபடுகிறது பா.ஜ.க” - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காட்டம்!

ராஜஸ்தானின் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க பா.ஜ.க முயற்சி செய்வதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

“ஆட்டுச் சந்தை அரசியலில் ஈடுபடுகிறது பா.ஜ.க” - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பா.ஜ.க முயல்வதாக முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 107 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது காங்கிரஸ். மேலும், 12 சுயேச்சை உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஷ்ட்ரிய லோக் தள், சி.பி.எம், பாரதிய ட்ரைபல் கட்சி ஆகியவற்றின் 5 உறுப்பினர்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானின் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க பா.ஜ.க முயற்சி செய்வதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

“ராஜஸ்தான் அரசு கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் பா.ஜ.க தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. பா.ஜ.க எல்லை மீறி ஆட்டுச் சந்தை அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல. 2014-ம் ஆண்டுக்கு முன்பு மறைமுகமாகச் செய்ததை ஆட்சிக்கு வந்தபிறகு பா.ஜ.க மிக மோசமான முறையில் செயல்படுத்தி வருகிறது.

“ஆட்டுச் சந்தை அரசியலில் ஈடுபடுகிறது பா.ஜ.க” - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காட்டம்!

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க பெரிய அளவில் சதித் திட்டம் தீட்டி வருகிறது பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பெரிய அளவு பணம் போவதாக பேச்சு எழுகிறது. சில எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க முன்வருவதாகவும் தெரிகிறது.

குஜராத்தில் 7 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி கடந்த மாதம் ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற்றனர். ராஜஸ்தானிலும் அதையே செய்யப் பார்த்தனர். ஆனால் நாங்கள் அவர்களைத் தடுத்தோம்.

இப்போதும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க. மக்கள் இதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். வரும் தேர்தல்களில் பா.ஜ.கவின் இந்த திமிர் போக்கு உடைக்கப்படும். மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories