அரசியல்

கேள்வி கேட்ட சிறுவனை அடித்த போலிஸ் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்த அ.தி.மு.க பிரமுகரிடம் பம்முவது ஏன்?

சேலம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளரை எட்டி உதைத்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி. அர்ஜுனன் இழிவாகப் பேசி அராஜகம் செய்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் ஊரடங்கு விதிகளை மீறியதாக கைது செய்த போலிஸார் விசாரணையின் போது அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் தொடர் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் கொந்தளித்து தங்களின் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். இதனிடையே மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பலர் மக்களிடையே கடும் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வரும் வேல்மயில் மற்றும் மனைவி பள்ளியில் படிக்கும் தனது மகனுடன் இரவு கடையில் இருந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லமணி கடையை உடனடியாக மூடும்படி எச்சரித்து அவர்களை ஒருமையில் பேசினார்.

கேள்வி கேட்ட சிறுவனை அடித்த போலிஸ் 
கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்த அ.தி.மு.க பிரமுகரிடம் பம்முவது ஏன்?

உதவி ஆய்வாளர் செல்லமணி ஒருமையில் பேசி அவர்களின் செல்போனை பிடுங்கி கொண்டு உடனடியாக கடையை காலி செய்ய வேண்டும் என எச்சரித்தார். அப்போது தனது பெற்றோரை ஒருமையில் காவல்துறையினர் பேசுவதை கண்டு ஆவேசமடைந்த பள்ளி மாணவர், உதவி ஆய்வாளர் செல்லமணியின் இருசக்கர வாகன சாவியை எடுத்துள்ளார்.

இதனையடுத்து சாவியை பிடுங்கிய பள்ளி மாணவரை அங்கிருந்த போலிஸார் கொடூரமாக அடித்து லத்தியால் தாக்கினர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவனை போலிஸ் வாகனத்தில் ஏற்றி, இரத்தினபுரி காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தின் போது போலிஸார் தனது மகனைத் தாக்குவதைக் கண்டு மகனை தாக்க வேண்டாம் எனக் கலங்கிய பெற்றோர் காவல்துறையினரிடம் கெஞ்சினர். ஆனாலும் போலிஸார் இரக்கம் காட்டாமல் அடித்தனர்.

இதனையடுத்து உயர் அதிகாரிகளின் அறிவுரையின் பேரில், பள்ளி மாணவனின் எதிர்காலம் கருதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து , அவரிடம் மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். இந்த சம்பவத்தில் பள்ளி சிறுவன் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனிடையே நேற்றைய தினம் மற்றோரு வீடியோவும் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், சேலம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளரை எட்டி உதைத்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி. அர்ஜுனன் இழிவாகப் பேசி அராஜகம் செய்துள்ளார்.

ஆனால் போலிஸாரை திட்டி எட்டி உதைத்த ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் தங்களின் வீராப்புகளை காட்டாமல் போலிஸார் நடந்துக்கொண்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, போலிஸார் தன்னை தாக்கிய ஆளும் கட்சிக்காரர்களை திருப்பி அடிக்கவேண்டாம்; குறைந்தபட்சம் வழக்குப் பதிவாவது செய்திருக்கலாமே? என்றும், நியாயமாக கேள்வி கேட்ட சிறுவனை அடித்த போலிஸ் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்த அ.தி.மு.க பிரமுகரிடம் பம்முவது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories