அரசியல்

“5 மாதங்களாகியும் கொரோனா தொற்றை புரிந்துகொள்ளவில்லையா? ஏன் இத்தனை குளறுபடி?” - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாகச் செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“5 மாதங்களாகியும் கொரோனா தொற்றை புரிந்துகொள்ளவில்லையா? ஏன் இத்தனை குளறுபடி?” - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று தமிழகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு கொரோனா தடுப்புப் பணிகளில் பல்வேறு குழப்பங்களோடு தெளிவற்றுச் செயல்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் தலைநகர் சென்னையில் தினந்தோறும் கடுமையாக அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்படவிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளில் அ.தி.மு.க அரசு ஆரம்பம் முதலே பல்வேறு குழப்பங்களுடனேயே செயல்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாகச் செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எடப்பாடி அரசின் முரணான செயல்பாடுகளை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி ஜூண் 12ம் தேதி பதிவிட்ட ட்வீட்டை குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

“5 மாதங்களாகியும் கொரோனா தொற்றை புரிந்துகொள்ளவில்லையா? ஏன் இத்தனை குளறுபடி?” - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

அதில், “3 நாட்களுக்கு முன்பு நீங்கள் சொன்ன வதந்தி, இன்று உங்களின் பெயரிலேயே உண்மையாகியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் வைரஸ் குறித்த அறிவியலை ஐந்து மாதங்களாகியும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இந்த குளறுபடிகள் காட்டுகின்றன. அதனால்தான் சொல்கிறோம் #WakeUpEPS

அப்படி யார் மீதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்களை நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள் என்பதை நான் யூகித்துவிட்டேன். ‘என் மனதிலிருந்த ஊரடங்கு நீட்டிப்பு யோசனையை திருடி வெளியிட்டுவிட்டனர்’ என்று மேலும் சிலபல வழக்குகளை அவர்கள் மீது போடுவீர்கள்தானே..” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories