Corona Virus

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு : ஜூன் 19-30 வரை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? #Lockdown

12 நாட்கள் ஊரடங்கில் ஜூன் 21 மற்றும் 28ம் தேதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் இரண்டாயிரத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் மட்டுமே 1,400க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர், மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் சென்னையில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வந்தனர்.

மருத்துவக் குழு நிபுணர்களும் முதலமைச்சரிடத்தில் அதனையே பரிந்துரைத்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், முழு ஊரடங்கை அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு : ஜூன் 19-30 வரை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? #Lockdown

மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைக்கு தடையில்லை.

அவசர மருத்துவ தேவைகளை தவிர்த்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகத்துக்கு அனுமதியில்லை.

33% பணியாளர்களுடன் மாநில அரசுத் துறைகளும், 33% பணியாளர்களுடன் மத்திய அரசின் அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.

ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் மட்டும் வங்கிகள் 33% பணியாளர்களோடு இயங்க அனுமதி. ஏ.டிஎ.ம் தொடர்பான பணிகள் வழக்கம் போல் செயல்படும்.

பொது விநியோக கடைகள் காலை 8 முதல் மதியம் 2 வரை செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது விநியோக கடைகள் செயல்படாது.

காய்கறி, மளிகை மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணிமுதல் மதியம் 2 வரை தகுந்த சமூக இடைவெளியுடன் செயல்படலாம். நடமாடும் காய்கறி, பழ வண்டிகளுக்கும் இந்த நேரக் கட்டுப்பாடு பொருந்தும்.

உணவகங்கள் காலை 6 முதல் மதியம் 2 வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. டீக்கடைகள் இயங்காது. ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அனுமதி. அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.

அம்மா உணவகங்கள், ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி சார்பில் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் அரசு அனுமதியுடன் இயங்கலாம்.

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு : ஜூன் 19-30 வரை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? #Lockdown

சரக்கு மற்றும் அத்தியாவசிய போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இருக்காது. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்குச் செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிப்போருக்கு இ-பாஸ் வழங்கப்படும்

அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், நீதித்துறை, நீதிமன்றங்கள் பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணியாற்றும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR சோதனை செய்து தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயே தங்கவைக்கப்பட்டு பணியாற்ற அனுமதி

சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரிவோருக்கும் ஒருமுறை RTPCR சோதனை செய்யப்பட்டு மேற்குறிப்பிட்டப்படி அனுமதிக்கப்படும்.

ஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மேற்கண்ட எவ்வித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். (ஜூன் 20 நள்ளிரவு 12 மணியில் இருந்து 22 காலை 6 மணி வரையிலும், 27 நள்ளிரவு 12 மணியில் இருந்து 29 காலை 6 மணி வரையிலும்)

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு : ஜூன் 19-30 வரை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? #Lockdown

ஊரடங்கு அமல்படுத்தப்படும் 4 மாவட்டங்களிலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும்.

மேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வெளியே சென்று வந்ததும் கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories