அரசியல்

மகாராஷ்டிரா: முரண்டுபிடிக்கும் பா.ஜ.க-சிவசேனா... சரத் பவார் - சஞ்சய் ராவத் சந்திப்புக்குப் பின்னணி என்ன?

பா.ஜ.க-வும், சிவசேனாவும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை கடைப்பிடிப்பதில் முரண்டுபிடித்து வருகின்றன.

மகாராஷ்டிரா: முரண்டுபிடிக்கும் பா.ஜ.க-சிவசேனா... சரத் பவார் - சஞ்சய் ராவத் சந்திப்புக்குப் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல் இம்மாதம் 21ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 24ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 45 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 52 இடங்களையும் கைப்பற்றியது.

எதிர் தரப்பில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தது. எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தொகுதிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் இரு கட்சிகளிடையே 50:50 என்ற சமமான அதிகாரப் பகிர்வு குறித்த சிக்கலால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

மகாராஷ்டிரா: முரண்டுபிடிக்கும் பா.ஜ.க-சிவசேனா... சரத் பவார் - சஞ்சய் ராவத் சந்திப்புக்குப் பின்னணி என்ன?

பா.ஜ.கவின் தேவேந்திர பட்னாவிஸ், தாமே மீண்டும் முதல்வர் எனவும் 5 ஆண்டுகாலம் பா.ஜ.கவின் ஆட்சிதான் எனவும் திட்டவட்டமாக கூறி வருகிறார். இலாகாக்களையும், ஆட்சி அதிகாரத்தையும் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கிறது சிவசேனா.

இரு தரப்பினரும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை கடைப்பிடிப்பதில் முரண்டுபிடித்து வருகின்றன. இதையொட்டி, பா.ஜ.க மற்றும் சிவசேனா கட்சியினர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக சிவேசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான சஞ்சய் ராவத் மற்றும் மூத்த எம்.பி.,க்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளனர்.

மகாராஷ்டிரா: முரண்டுபிடிக்கும் பா.ஜ.க-சிவசேனா... சரத் பவார் - சஞ்சய் ராவத் சந்திப்புக்குப் பின்னணி என்ன?

இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதித்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பா.ஜ.க-வை தவிர்த்துவிட்டு, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையேயான கூட்டணி ஆட்சி அமையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சிவசேனா கட்சி, பா.ஜ.க-வை தங்கள் கோரிக்கைக்குப் பணிந்து போகச் செய்வதற்காகவே இதுபோன்ற சந்திப்புகளை நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories