அரசியல்

நலத் திட்டங்கள் எனும் பெயரில் வாயில் நுழையாத சமஸ்கிருத வார்த்தைகள் தேவையா? : இதுவும் மொழித் திணிப்புதான்!

பா.ஜ.க அரசு, திட்டங்களுக்கு புரியாத வகையில் பெயர் வைப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

நலத் திட்டங்கள் எனும் பெயரில் வாயில் நுழையாத சமஸ்கிருத வார்த்தைகள் தேவையா? : இதுவும் மொழித் திணிப்புதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசு இந்தித் திணிப்பை எல்லா வகையிலும் செயல்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. திட்டங்களின் பெயர்களையும் இந்தித் திணிப்பை மையப்படுத்தி, எதற்கான திட்டம் என்றே புரியாத வகையில் சூட்டுவது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி வருகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு மக்களுக்குப் புரியாத பெயர்கள் சூட்டப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அந்தக் குறிப்பிட்ட விவாத நிகழ்ச்சியில், அ.தி.மு.க-வின் செம்மலை, பா.ஜ.க-வின் நரேந்திரன் ஆகியோரை நோக்கிப் பேசிய பீட்டர் அல்போன்ஸ், பா.ஜ.க அரசின் திட்டங்களை வாசித்துக்காட்டி அவை எதற்கான திட்டங்கள் என பதில் சொல்லுமாறு கூறினார்.

“உஜ்வாலா யோஜனா, ஆயுஷ்மான் பாரத், கிரிஷ் இன்ஜாய், ஆட்டோசேவா ஜனதவ், ஜன் ஆஷாசதி திவாஸ், பிரதான் மந்திரி ஜந்தன் யோஜனா, பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா, நம் கி நாப் முன் கி ஹை, ஆப் கா பேங்க் க ட் ஆப் கா த்வார் என பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

காங்கிரஸ் வைத்த பெயர்களைப் பாருங்கள், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என வைக்கப்பட்டது. ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ என வைத்தாலும் அதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர் சூட்டப்பட்டது.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories