அரசியல்

“அரசு உயரதிகாரிகளை மிரட்டுகிறார் கிரண்பேடி” - அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு!

மக்கள் பணி செய்ய முற்படும் அரசு உயரதிகாரிகளை கிரண்பேடி மிரட்டுகிறார் என புதுச்சேரி சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

“அரசு உயரதிகாரிகளை மிரட்டுகிறார் கிரண்பேடி” - அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “புதுவை அரசு அதிகாரிகளை செயல்படவிடாமல் தடுத்து வருகிறார் கிரண்பேடி. அவருக்கென தனி சட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளாக மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேச அனுமதி கேட்டு வருகிறேன். இதுவரை கிரண்பேடி எனக்கு அனுமதி தரவில்லை.

“அரசு உயரதிகாரிகளை மிரட்டுகிறார் கிரண்பேடி” - அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு!

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிரண்பேடி, ஏனாம் நகருக்கு வந்தால் மிகப் பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும், ஏனாம் பகுதி நிலத்தை ஆட்சியாளர்களை கலந்து ஆலோசிக்காமல் ஆந்திரா மாபியா கும்பலுக்கு தருவதற்கு கிரண்பேடி முயற்சி செய்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு உதவ முன்வந்தால் கூட துணைநிலை ஆளுநர் அதனைத் தடுக்கிறார். இவர் மீது விரைவில் பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் புகார் அளிக்கவுள்ளேன்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories