அரசியல்

பெண் பத்திரிகையாளரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! (வீடியோ)

பெண் நிருபரை பார்த்து "அடி போடி" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பத்திரிகையாளரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

37வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் 20 பொருள்கள் மற்றும் 12 சேவைகள் மீது ஜிஎஸ்டி வரி மாற்றம் செய்யப்பட்டது.

ஜி.எஸ்.டி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து 'அடி போடி' என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பின்மையைப் பற்றி பெண் பத்திரிகையாளர் ஒரு கேள்வி எழுப்பிய போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் 'அடி போடி' என்று சொல்லி உள்ளார். அதை அங்கு யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், நிர்மலா சீதாராமன் பேட்டி இணையத்தில் வீடியோவாக வெளியான பின்னர் சிலர் இதை கவனித்துவிட்டனர். இப்போது சமூக வலைத்தளங்களில் அது வைரலாக பரவி வருகிறது.

ஒரு மத்திய அமைச்சர் பொது இடத்தில் இவ்வாறு பேசுவது சரியா என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories