அரசியல்

ஓ.பி.எஸ் தொகுதியில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதி மறுப்பு!

தேனி மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என விழாவிற்கு அனுமதி மறுத்து காவல்துறை வழங்கியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பி.எஸ் தொகுதியில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதி மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை கிளை நூலகத்தை அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகத்தில் பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இன்று விழா கொண்டாடப்பட இருந்தது. கூடவே, தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் விஜயராஜுக்குப் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஓ.பி.எஸ் தொகுதியில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதி மறுப்பு!

இவ்விழாவிற்கு அனுமதிகோரி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தென்கரை காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி நடத்தக் கூடாது எனக்கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.

ஓ.பி.எஸ் தொகுதியில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதி மறுப்பு!

அந்தக் கடிதத்தில், தென்கரை கிளை நூலக வளாகம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய இடம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அண்ணா, பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் சொந்த மாவட்டத்திலியே அனுமதி மறுத்த சம்பவம் சமூகவலைதளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories