அரசியல்

ஐன்ஸ்டீனா? நியூட்டனா?... "பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு.." - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க கணிதம் எந்த வகையிலும் உதவவில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஐன்ஸ்டீனா? நியூட்டனா?... "பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு.." - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''நாடு 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை அடைய வேண்டுமானால், 12 % வளர்ச்சியுடன் செல்ல வேண்டும். ஆனால், நாம் தற்போது, 6-7 வரையான வளர்ச்சி தான் கொண்டுள்ளோம்.

ஆகையால் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு கணக்குப் போட வேண்டாம். அத்துடன் பொருளாதாரத்தில் கணக்குகளைக் கொண்டுவராதீர்கள். ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அவருக்கு கணக்கு உதவவில்லை'' எனக் கூறினார்.

பா.ஜ.க அமைச்சர்கள் இதுபோன்று உளறி வருவது வாடிக்கையாகி விட்டது. கர்நாடக துணை முதல்வர் நல்ல சாலைகளால் தான் விபத்துகள் நடக்கிறது என தெரிவித்திருந்தார்.

நேற்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மோட்டார் வாகனத்துறை வீழ்ச்சிக்கு ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்கள்தான் காரணம் என்று கூறிய கருத்தும், இதே போல சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளானது.

நிர்மலா சீதாராமன் தெரிவித்த காரணத்தை கிண்டல் செய்யும் வகையில் #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டனர்.

புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது நியூட்டன் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில், அமைச்சர் பியூஸ் கோயல் விஞ்ஞானியின் பெயரை மாற்றிக் கூறியதை வைத்துக்கொண்டு நெட்டிசன்ஸ் அவரை சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

நேற்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மோட்டார் வாகனத்துறை வீழ்ச்சிக்கு ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்கள்தான் காரணம் என்று கூறிய கருத்தும், இதே போல சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளானது.

நிர்மலா சீதாராமன் தெரிவித்த காரணத்தை கிண்டல் செய்யும் வகையில் #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டனர். பா.ஜ.க அமைச்சர்கள் இதுபோன்று உளறி வருவது வாடிக்கையாகி விட்டது. கர்நாடக துணை முதல்வர் நல்ல சாலைகளால் தான் விபத்துகள் நடக்கிறது என தெரிவித்திருந்தார்.

banner

Related Stories

Related Stories