அரசியல்

டிடிவி தினகரன் மீது அதிருப்தி - கட்சி தாவுகிறாரா புகழேந்தி? வைரலாகும் அ.ம.மு.க ஐ.டி விங் வெளியிட்ட வீடியோ

டிடிவி தினகரன் மீது அதிருப்தி - கட்சி தாவுகிறாரா புகழேந்தி? வைரலாகும் அ.ம.மு.க ஐ.டி விங் வெளியிட்ட வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019 தேர்தலுக்கு முன்னும், பின்னும் அ.ம.மு.க-வின் பல முக்கிய நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்தனர். அந்த வரிசையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி மாற்றுக் கட்சிக்கு தாவ இருப்பதாக சுட்டிக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்ட போது, சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாகவும் விசுவாசியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் புகழேந்தி. அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க-வில் சேர்ந்தார்.

ஆனால், தேர்தல் தோல்வி, முக்கிய நிர்வாகிகள் விலகல், தினகரனின் செயல்பாடுகள் மீது புகழேந்தி அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது.

இந்நிலையில் கோவை ஹோட்டல் ஒன்றில், தன்னை சந்திக்க வந்த கட்சியினரிடம் புகழேந்தி பேசுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதில், மாற்றுக் கட்சிக்கு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக புகழேந்தி பேசுகிறார்.

“ போற இடத்தில், சரியான முகாந்திரம் இல்லாம போகக் கூடாது. அதுக்காகத் தான் வெயிட் பண்றேன். கட்சிக்காக பல தியாகங்கள செஞ்சவன் நான். 14 வருசம் அட்ரஸ் இல்லாம இருந்த டி.டி.வி-க்கே முகவரி கொடுத்தவன் நான். அம்மா சாவுல கூட தினகரன் இல்ல. அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, பட்டியல் ரெடி பண்ணிட்டு சொல்றேன்” என்று தனக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அந்த வீடியோவில் பேசுகிறார் புகழேந்தி.

”அம்மா சாவில் கூட டி.டி.வி தினகரன் இல்லை” - அ.ம.மு.க-வின் முக்கிய நிர்வாகி புகழேந்தி தினகரனை விமர்சித்து பேசுவதாக வைரலாகும் வீடியோ #ammk #puhazhendhi #ttv

Posted by Kalaignar Seithigal on Sunday, September 8, 2019

புகழேந்தி பேசும் அந்த வீடியோ, ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.கவின் ஐ.டி விங் மூலம் இந்த வீடியோ வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories