அரசியல்

5 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக மோடி அரசு செலவிட்ட தொகை இவ்வளவா? - ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்!

அரசு விளம்பரத்துக்காக கடந்த பா.ஜ.க ஆட்சியில் 5 ஆயிரத்து 276 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளது.

5 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக மோடி அரசு செலவிட்ட தொகை இவ்வளவா? - ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விளம்பரத்திற்காக மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியில் செலவு செய்த தொகையின் விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், 2014 முதல் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் மோடியின் ஆட்சியில் ரூ.5,276 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.2,604 கோடியும், பத்திரிகை விளம்பரங்களுக்காக ரூ.2,379 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய 3 மாதங்களில் மட்டும் 367 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே மோடியை விளம்பரப் பிரியர் என்று எதிர்க்கட்சிகள் சாடி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அதனை உறுதிபடுத்தும் விதமாக இருக்கிறது. விளம்பரத்திற்காக இவ்வளவு அரசுப் பணத்தைச் செலவு செய்துள்ளது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories