அரசியல்

’செங்கோட்டையில் பா.ஜ.க கொடியேற்றுவது காலத்தின் துயரம்’ - வருத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி

ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.க இன்று செங்கோட்டையில் கொடி ஏற்றுவது காலத்தின் துயரம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

’செங்கோட்டையில் பா.ஜ.க கொடியேற்றுவது காலத்தின் துயரம்’ - வருத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில், தங்கபாலு, குமாரி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ''பல்லாயிரக்கணக்கான மக்கள் சிரமப்பட்டுப் பல இன்பங்களை இழந்து கிடைத்தது தான் இந்த சுதந்திரம். இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.க இன்று செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தான் காலத்தின் துயரம்.

இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட நாம் தயாராக இருக்க வேண்டும்.ஏனெனில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் வசிக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் உரிமையைப் பறிப்பதில் என்ன ராஜதந்திரம் உள்ளது?'' எனவும் கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories