அரசியல்

‘வட மாநிலத்தவர்களே ! சமஸ்கிருதம் ஒரு இறந்து போன மொழி.. அதை எங்களிடம் திணிக்க வேண்டாம்’ - வைகோ காட்டம்

சமஸ்கிருதம் இறந்து போன மொழி என்று ம.தி.மு.க பொது செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

‘வட மாநிலத்தவர்களே ! சமஸ்கிருதம் ஒரு இறந்து போன மொழி.. அதை எங்களிடம் திணிக்க வேண்டாம்’ - வைகோ காட்டம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ம.தி.மு.க பொது செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ சமஸ்கிருதம் ஒரு இறந்து போன மொழி இதை நான் ஆயிரம் முறை கூறுவேன். சமஸ்கிருதம் ‘டெத் லாங்குவேஜ்’ என வட மாநிலத்தவர்களுக்கு புரியும்படி சொல்கிறேன். இதை நான் ஆயிரம் முறை சொல்லுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன்.

தமிழை விட சமஸ்கிருதம்தான் பழமையானது என்ற ஒரு பொய்யான தகவலை தமிழக பாடத்திட்டத்தில் திணித்துள்ளனர். அமைச்சர் செங்கோட்டையனை நான் குறைகூறவில்லை. அவர் தவறான தகவலை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்” எனக் கூறினார்.

மேலும், “ தமிழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம்தான் பழமையானது என பொய்யான தகவலை கொண்டு வந்து திணித்தது யார்? அந்த துரோகி, கயவன் யார்? ” என்றும் கேள்வியெழுப்பினார்.

banner

Related Stories

Related Stories