அரசியல்

பா.ஜ.க ஆட்சியில் இந்தியா ‘அமைதியான நிதி நெருக்கடியை’ எதிர்க்கொள்கிறது: மோடியின் பொருளாதார ஆலோசகரே வேதனை!

பா.ஜ.க ஆட்சியில் இந்தியா ‘அமைதியான நிதி நெருக்கடி’-யில் மாட்டிக்கொண்டிருப்பதாக, பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள ரதின் ராய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க ஆட்சியில் இந்தியா ‘அமைதியான நிதி நெருக்கடியை’  எதிர்க்கொள்கிறது: மோடியின் பொருளாதார ஆலோசகரே வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள புள்ளிவிபரங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் பலர் கண்டித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள ரதின் ராய் என்பவர், பட்ஜெட்டில் உள்ள குளறுபடிகளைத் தெரிவித்தார்.

அதில், “பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, கடந்த 2018 - 19ம் ஆண்டில் இந்திய அரசின் வருவாய் 17.3 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பொருளாதார அறிக்கையில் 15.6 லட்சம் கோடி என்று விவரம் தரப்பட்டுள்ளது. அப்படியானால் 1.7 லட்சம் கோடி எங்கே போனது?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரின் இந்த கேள்வி பா.ஜ.க-வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் பா.ஜ.க அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

அதாவது, தற்பொது இந்தியா வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மோசமான 'அமைதியான நிதி நெருக்கடியை' எதிர்கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்றில் அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தியா தற்போது வெளியில் தெரியாத 'அமைதியான நிதி நெருக்கடியை' சந்தித்துள்ளது.

ரதின் ராய்
ரதின் ராய்

வரிவருவாயில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையே தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலுக்கான முக்கிய காரணம். நடப்பு நிதியாண்டில் வரி வருவாய் மட்டும் ரூ.25 லட்சத்து 53 ஆயிரம் கோடியை திரட்டுவது என முடிவு செய்யபட்டது. இதனை நிதிநிலை அறிக்கையிலும் தெரிவித்துள்ளனர்.

எனது கணிப்பின் படி 2019 - 2020ம் நிதியாண்டில் மத்திய அரசு திட்டமிட்ட வருவாயை திரட்டி விட முடியாது. வரி வருவாய்யைத் திரட்ட ஒன்று அதிக கடன் வாங்க வேண்டும், அல்லது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும். இதில் அதிக கடன் வாங்கினால் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனையடுத்து இந்த செலவுகளை அதிகமாக குறைக்கும் முடிவிற்கு சென்றால், தற்பொது இருக்கும் இந்த பொருளாதராத்திற்கு மேலும் பாதிப்பாக அமைந்துவிடும். இதனைக் கணக்கிட்டுதான் இந்தியா 'அமைதியான நிதி நெருக்கடியை' சந்தித்துள்ளது என தெரிவிக்கிறேன்”. என்று அவர் கூறினார்.

அவரின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதி பற்றக்குறையால் மாநில அரசுகளுக்கு வரவேண்டிய மானியத் தொகைகள், சலுகைகள் போன்றவை தடைபட வாய்ப்புள்ளதாகவும், மேலும் பாஜக அரசின் தவறான பொருளாதரக் கொள்கையால் இத்தகைய பாதிப்புகளை நாட்டுமக்கள் சந்திக்கவேண்டியுள்ளது. என பொருளாதார வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories