அரசியல்

"சபையை கட்டுப்படுத்துங்கள்" சபாநாயகருக்கே உத்தரவிட்ட மொய்த்ரா - ஊபா சட்ட திருத்தத்திற்கு எதிராக ஆவேச உரை!

அரசாங்கத்தை எதிர்த்தால் ஒருவர் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளதாக மக்களவையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கூறினார்.

"சபையை கட்டுப்படுத்துங்கள்" சபாநாயகருக்கே உத்தரவிட்ட மொய்த்ரா - ஊபா சட்ட திருத்தத்திற்கு எதிராக ஆவேச உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட (UAPA) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. அதை ஆதரித்து 287 வாக்குகளும், அதற்கு எதிராக எட்டு வாக்குககளும் விழுந்தன. இச்சட்டத்தில் செய்த மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் இன்று பல ஆட்சேபனைகளை எழுப்பின.

பாராளுமன்றத்தின் தான் மேற்கொண்ட முதல் பேச்சிலிருந்தே பிரபலமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். '' மாநில காவல்துறையினரின் அனுமதியின்றி எந்த மாநிலத்திற்கும் என்.ஐ.ஏ செல்ல அனுமதிக்கும் இந்த விதி நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்த மசோதாவின் அம்சங்கள் மக்களுக்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும் உள்ளது. இது மிகவும் ஆபத்தான செயல்" என்று பதிவு செய்தார்

மேலும், '''அரசாங்கத்தை எதிர்த்தால் ஒருவர் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு முறையும் அரசாங்கத்துடன் உடன்படாத போது ஏன் எதிர்க்கட்சிகள் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு முறையும் அரசாங்கத்துடன் எதிர்க்கட்சிகள் உடன்படவில்லை, என்றால் அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரங்கள் எதிர்க்கட்சிகளை தேச விரோதிகள் என்று அழைக்கிறார்கள்'' என்று ஆவேசமாக பேசினார்.

“ இந்த சட்டத்தின் மூலம் மத்திய அரசு எந்த ஒரு தனி நபரையும் தீவிரவாதி என்று முத்திரைக் குத்த முடியும். இது, நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆபத்து. நாளைக்கு நான் கூட இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம். யார் கேட்க முடியாது. அரசியல் பழிவாங்கலுக்காகவும், சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்காகவுமே கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.

அவரது இந்த ஆவேச பேச்சுக்கு பா.ஜ.கவினர் தொடர்ந்து இடையூறு செய்து வந்தனர். ஆனால் அசராத மொய்த்ரா, அவையை கட்டுப்படுத்துமாறு சபாநாயகருக்கே அறிவுரை வழங்கினார். ஆனால் அவருமே மொய்த்ராவின் பேச்சை உதாசீனப்படுத்தவே ”நான் முழுவதுமாக பேசிவிட்டு தான் செல்வேன்.நீங்கள் மெஜாரிட்டியாக இருக்கலாம். ஆனால், நானும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறேன். எனவே நான் விரும்பியதை முழுமையாக பேசுவேன். நீங்கள் குறுக்கிட்ட நேரத்தையும் சேர்த்து நான் பேசுவேன்.” என்று அவர் கூறியதும் அவையில் கைத்தட்டல்களும் சிரிப்பலையும் ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories