அரசியல்

“சட்டம் ஒழுங்கு சரியில்லாததுக்கு நாங்க என்ன பண்றது?” : திண்டுக்கல் சீனிவாசன் அலட்சிய பேச்சு!

“மாநிலத்தில் நிகழும் கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு நாம் என்ன செய்யமுடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

“சட்டம் ஒழுங்கு சரியில்லாததுக்கு நாங்க என்ன பண்றது?” : திண்டுக்கல் சீனிவாசன் அலட்சிய பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இன்று (ஜூலை 24) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் நெல்லை தி.மு.க முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், "பணம், நகைக்காக இப்படி கொலை, கொள்ளைகள் நடந்து வருகின்றன. எல்லா இடங்களிலும் இந்த மாதிரி கொலை கொள்ளைகள் நடந்து வருவதை தினசரி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம்.

எல்லா ஊர்களிலும், எல்லா நாட்களிலும் எல்லோருடைய ஆட்சியிலும் கொலை, கொள்ளைகள் நடக்கத்தான் செய்கின்றன. குற்றம் செய்பவர்கள் அவர்களாகவே பார்த்துத் திருத்திக்கொண்டால்தான் உண்டு. மாநிலத்தில் நிகழும் கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு நாம் என்ன செய்யமுடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது அரசின் முக்கியப் பணி என்பதையும், சட்டம் ஒழுங்கு எனும் துறை முதலமைச்சரின் முக்கிய கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதையும் அறியாமல், மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் அலட்சியமாகப் பேசியிருப்பது கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.

“சட்டம் ஒழுங்கு சரியில்லாததுக்கு நாங்க என்ன பண்றது?” : திண்டுக்கல் சீனிவாசன் அலட்சிய பேச்சு!

தமிழக வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், தொடர்ந்து மேடைகளில் உளறிக்கொட்டி வருபவர். அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான, பா.ம.க-வின் வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதேபோல, பொங்கல் பரிசாக ரேஷன் கடைகள் மூலம் மாம்பழம் கொடுத்தோம் எனவும் உளறி சர்ச்சையில் சிக்கினார்.

மேலும், இந்தியப் பிரதமர் மோடி என்பதைக்கூட மறந்து, பிரதமர் மன்மோகன் சிங் என்று உச்சரித்தவர்; கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனை பரதநாட்டியக் கலைஞர் என்று அழைத்தவர். இத்தகைய சர்ச்சைப் பேச்சுகளுக்குப் புகழ்பெற்ற சீனிவாசனின் தற்போதைய பதிலும் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories