அரசியல்

“நீட், நெக்ஸ்ட் தேர்வுகளால் ஜனநாயகப் பேரிழப்பு ஏற்படும்” - நாராயணசாமி கடும் கண்டனம்!

நீட் தேர்வை ரத்து செய்யாமல் தேசிய மருத்துவ கவுன்சில் அமைக்க முடிவெடுத்திருப்பது முறையானது அல்ல என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நீட், நெக்ஸ்ட் தேர்வுகளால் ஜனநாயகப் பேரிழப்பு ஏற்படும்” - நாராயணசாமி கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவ படிப்பில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் இறுதி ஆண்டில், நெக்ஸ்ட் எனும் தேசிய எக்ஸிட் தேர்வை எழுத வேண்டும் என மத்திய பா.ஜ.க அமைச்சரவை முடிவெடுத்து அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் தற்போது புதிதாக தேர்வு முறையையும், தேசிய மருத்துவ கவுன்சில் அமைக்கவும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

இதன் மூலம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர் என கூறினார். மேலும், மருத்துவப் படிப்பிற்கு தகுதியை நிர்ணயிப்பது மாநில உரிமையுடன், மாணவர்களின் உரிமையும் பாதிக்கப்படும் என்றார்.

நெக்ஸ்ட் தேர்வு தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்போது அதனை எதிர்த்து காங்கிரஸ் குரல் கொடுக்கும். அதேபோல், நாளை மறுதினம் கூடவுள்ள புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories