அரசியல்

ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி மதத்தின் பேரில் நாட்டை துண்டாக்க பார்க்கிறது! கடுகடுக்கும் நாராயணசாமி

நாட்டின் விஷ பூச்சியாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உள்ளது. மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டாட நினைக்கிறது. என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி மதத்தின் பேரில் நாட்டை துண்டாக்க பார்க்கிறது! கடுகடுக்கும் நாராயணசாமி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முன்னாள் முதல்வர் காமராஜரின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலவர் நாராயணசாமி, "காமராஜர் காலத்தில் பிறந்த நாளுக்காக செய்யப்படும் விளம்பரம் தொகைகளை பள்ளிகளுக்கு பயன்படுத்துங்கள் என்று காமராஜர் கூறுவார். ஆனால் இன்று அப்படி நடப்பது அல்ல. இந்த காலகட்டத்தில் அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது. என்று வேதனையை தெரிவித்தார்.

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இந்திய நாட்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் விஷ பூச்சியாக உள்ளது. மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டாட நினைக்கிறது.

இஸ்லாமிய மக்கள் மீது அவர்கள் நடத்தும் தாக்குதல் அதிகரித்து விட்டது. தேசம் முழுவதும் உள்ள 15 கோடி இஸ்லாமியர்களை இந்தியாவில் வெளியேற்றவும் துடிக்கிறார்கள். அது நடக்க நாம் அனுமதிக்க கூடாது. அதற்கு எதிரான போராட்டத்தை கொண்டு செல்வோம்” என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories