அரசியல்

ஜார்கண்ட் முதல்வர் வேட்பாளர் .. பா.ஜ.க.,வில் இணைகிறார்.. அமித்ஷா சந்திப்பு : அரசியலில் களம் காணும் தோனி ?

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக தோனிபோட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது.

ஜார்கண்ட் முதல்வர் வேட்பாளர் .. பா.ஜ.க.,வில் இணைகிறார்.. அமித்ஷா சந்திப்பு : அரசியலில் களம் காணும் தோனி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும் இந்திய அணியின் வீரர் தோனி தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என்ற எண்ணத்தில் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்

அதற்கு ஏற்றார்போல் சமூக வலைதளத்தில் பல்வேறு பதிவுகள், மீம்ஸ்கள் என பலவற்றை நெட்டிசன்களும், தோனி ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜார்கண்ட் முதல்வர் வேட்பாளர் .. பா.ஜ.க.,வில் இணைகிறார்.. அமித்ஷா சந்திப்பு : அரசியலில் களம் காணும் தோனி ?

இந்த நிலையில், டெல்லியில் பேட்டியளித்த பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான், கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்த பிறகு தோனி பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்ற கூறியுள்ளார். பாஜகவில் தோனியை சேர்ப்பது குறித்து பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டுமில்லாமல் தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அம்மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தோனியை களமிறக்கவும் பா.ஜ.க திட்டமிட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜார்கண்ட் முதல்வர் வேட்பாளர் .. பா.ஜ.க.,வில் இணைகிறார்.. அமித்ஷா சந்திப்பு : அரசியலில் களம் காணும் தோனி ?

இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க.,வின் வாக்கு வங்கி குறைவாக உள்ளது என்பதை அறிந்து பிரபல நட்சத்திரங்களை வேட்பாளர்களை களமிறக்கி வாக்குகளை கவரே இது போன்று வியூகங்களை வகுத்து வருகிறது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித்ஷா தோனியை சந்தித்திருந்தார். இதுமாதிரியான நடவடிக்கைகளைச் செய்வதில் அமித்ஷா மிகவும் கெட்டிக்காரர். இதனால் இந்த செய்தி குறித்து பரபரப்பு தொற்றியுள்ளது.

ஆனால், அரசியலில் இணைவது குறித்தும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி இதுகாறும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழகத்தில் தங்களது வாக்கு வங்கியை ஏற்படுத்துவதற்காக ரஜினிகாந்த் மூலமாக பா.ஜ.க காய் நகர்த்தியதையும், அது பலனளிக்காமல் போனதையும் இந்த நேரத்தில் நினைவுக்கூறலாம்.

banner

Related Stories

Related Stories