அரசியல்

ராஜினாமா செய்யறாங்க.. திரும்ப ஆதரவு தர்றாங்க : என்ன நடக்கிறது காங்கிரஸில் - தொடர் குழப்பத்தில் கர்நாடகா !

ராஜினாமா செய்த கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் நாகராஜ் மீண்டும் காங்கிரஸில் இருப்பதாக உறுதி அளித்துள்ளார் என அமைச்சர் டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளது அங்கு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா செய்யறாங்க.. திரும்ப ஆதரவு தர்றாங்க : என்ன நடக்கிறது காங்கிரஸில் - தொடர் குழப்பத்தில் கர்நாடகா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு சிக்கல், அங்கு அரசியல் குழப்பம் தலை தூக்கியுள்ளதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

பா.ஜ.க.,வின் சதி வலைகளில் சிக்கியுள்ள கர்நாடக காங்கிரஸ் உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் பணியில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒற்றையாளாகப் போராடிய நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

ராஜினாமா செய்யறாங்க.. திரும்ப ஆதரவு தர்றாங்க : என்ன நடக்கிறது காங்கிரஸில் - தொடர் குழப்பத்தில் கர்நாடகா !

மும்பையில் கைது செய்து விடுவிக்கப்பட்ட பின்பும் ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றும் நோக்கில் அயராது பணியாற்றி வருகிறார் கர்நாடகத்தின் மூத்த அமைச்சர் டி.கே. சிவக்குமார்.

அந்த வகையில், காங்கிரஸின் வீட்டு வசதித்துறை அமைச்சர் எம்.டி.பி. நாகராஜ் தனது ராஜினாமாவை வழங்கியிருந்த நிலையில் இன்று அவரை சந்தித்து பேசியுள்ளார் சிவக்குமார்.

அதன் பின் பேட்டி அளித்த அவர், தங்களுடனேயே (காங்கிரஸ்) இருப்பதாக நாகராஜ் உறுதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், 40 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்கள் வாழ்வோ, சாவோ அதை ஒன்றாகவே சந்திக்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேசிய பேசிய ராஜினாமா செய்த அமைச்சர் நாகராஜ், சூழ்நிலை காரணமாக ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டேன் என்றும், அதனை தற்போது வாபஸ் பெறுமாறு அமைச்சர் சிவக்குமார் கோரிக்கை விடுத்தார் என்றும் அவர் கூறினார்.

மேலும், என்னுடன் ராஜினாமா செய்த சுதாகர் ராவிடம் பேசிய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கிறோம் என நாகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று ராஜினாமா கடிதம் அளித்த அமைச்சர், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பேன் என்று சொல்லி இருப்பது அம்மாநில அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories