அரசியல்

“பா.ஜ.க ஏன் இப்படி பேராசையில் அலைகிறது?” - கடுமையாகச் சாடிய மம்தா பானர்ஜி!

கர்நாடக அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வரும் சூழலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குதிரை பேரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க-வை விமர்சித்துள்ளார்.

“பா.ஜ.க ஏன் இப்படி பேராசையில் அலைகிறது?” - கடுமையாகச் சாடிய மம்தா பானர்ஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கர்நாடக அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வரும் சூழலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குதிரை பேரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க-வை விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 16 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்தக் கட்சித் தாவல்களுக்காக பா.ஜ.க பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல்கள் அம்பலமாகின. இந்நிலையில், குதிரை பேரத்தில் ஈடுபடுக் பா.ஜ.க-வை கடுமையாகச் சாடியுள்ளார்.

“பா.ஜ.க-வின் இப்படிப்பட்ட அணுகுறையை வன்மையாக கண்டிக்கிறேன். மும்பையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்குள் கூட பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

நமது நாட்டு அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது. இதுபோன்ற குதிரை பேரத்தை ஊக்குவித்தால் ஜனநாயகம் செத்துப்போகும். ஜனநாயகத்துக்காக போராடும் கட்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

மேலும் அவர், “எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. எதற்காக பா.ஜ.க இவ்வளவு பேராசை கொண்டு அலைகிறது? அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று அந்தக் கட்சி நினைக்கிறது. கர்நாடகாவில் வேலை முடிந்தததும் பா.ஜ.க தனது கவனத்தை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை நோக்கித் திருப்பும். அரசுகளை கலைப்பதுதான் அவர்களது வேலையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories