அரசியல்

சமூக நீதிக்கு எதிரான இடஒதுக்கீட்டை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது : வைகோ பேட்டி

பொருளாதார ரீதியில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார் வைகோ.

சமூக நீதிக்கு எதிரான இடஒதுக்கீட்டை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது : வைகோ பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திண்டுக்கலில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 10% இட ஒதுக்கீடு விவகாரம் குறித்துப் பேசினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பேசியதாவது, “சூழலியலாளர் முகிலன் உடல்நலம் மிக மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல் நலம் குறித்தும், ஏதாவது துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் ஆராய வேண்டும். அவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.” என்றார்.

மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வைகோ, “இது ஒரு சமூகநீதிக்கு எதிரான ஒரு செயல். தமிழகம் என்றும் அதை ஏற்றுக்கொள்ளாது; தமிழக அரசும் என்றும் ஏற்றுக் கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories