அரசியல்

இள ரத்தங்களை ஈர்க்கும் திறன் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் - கொ.ம.தே.க ஈஸ்வரன் வாழ்த்து !

தி.மு.க இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இள ரத்தங்களை ஈர்க்கும் திறன் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் - கொ.ம.தே.க ஈஸ்வரன் வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தி.மு.க இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :

'' தி.மு.க.வில் இளம் இரத்தத்தை பாய்ச்சக் கூடிய, தமிழக இளைஞர்களை தி.மு.க பக்கம் ஈர்க்க கூடிய பொறுப்புகளை சுமக்க கூடிய பதவியாக இளைஞரணி செயலாளர் பதவி பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பதவிக்கு திறமையும், தகுதியும் உள்ள சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்திருப்பது வரவேற்புக்குரியது.

அந்த புதிய பொறுப்பில் தி.மு.க.வின் தலைவர் அவர்கள் 32 ஆண்டுகாலம் அலங்கரித்த பொறுப்பில் அவரை போலவே இவரும் தமிழக இளைஞர்களுடைய அன்பை பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து தி.மு.க தலைவரோடு சேர்ந்து வெற்றிக்கு வித்திட்ட சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம் '' ஈஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories