அரசியல்

கலெக்‌ஷன்,கமிஷன்,கரப்ஷன் தான் அதிமுகவின் நோக்கம்; மக்களின் பிரச்னையல்ல-தயாநிதிமாறன் எம்.பி

அ.தி.மு.க அரசுக்கு மக்களின் பிரச்னையைவிட கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்தான் முக்கியம் என மத்திய சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் சாடியுள்ளார்.

கலெக்‌ஷன்,கமிஷன்,கரப்ஷன்
தான் அதிமுகவின் நோக்கம்; மக்களின் பிரச்னையல்ல-தயாநிதிமாறன் எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகமெங்கும் காணுமிடமெல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இந்த பிரச்னையை போக்காத எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.கவினர் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தி கண்டன முழக்கங்களும் எழுப்பி வருகின்றனர்.

அவ்வகையில், சென்னையில் பிராட்வே, துறைமுகம் பகுதியில் தி.மு.க எம்.பியும், கழக மக்களவைக்குழுத் துணைத்தலைவருமான கனிமொழியின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஏராளாமான தி.மு.கவினருடன் மத்திய சென்னைத் தொகுதி எம்.பியான தயாநிதிமாறனும் கலந்துக்கொண்டார்.

பின்னர் பேசிய தயாநிதிமாறன், அ.தி.மு.கவினருக்கு மக்களின் அன்றாட பிரச்னையைவிட கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் தான் முக்கியம் என சாடினார். மேலும், டாஸ்மாக்கிற்காக வழங்கும் 3 கோடி லிட்டர் தண்ணீரை மக்களுக்கு வழங்கினால் தான் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், தி.மு.க 2004ல் கொண்டுவந்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுப்படுத்தியிருந்தாலே தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால் இப்போதுதான் நெமிலியில் இதற்காக அடிக்கல் நாட்டியுள்ளனர். இது செயல்படுவதற்கு 3 ஆண்டுகளாவது ஆகும் என வேதனையுடன் தெரிவித்தார்.

மக்களவையில் தமிழக மக்களின் பிரச்னைகளுக்கும், அவர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து தி.மு.க. குரல்கொடுக்கும் என கூறினார்.

banner

Related Stories

Related Stories