அரசியல்

பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்திருப்பது துரதிருஷ்ட வசமானது - சோனியா காந்தி சாடல்!

மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அப்பகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்திருப்பது  துரதிருஷ்ட வசமானது - சோனியா காந்தி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.

அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக ஒருமனதாகவும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், ”ஆட்சி அமைப்பதற்காக மக்களை கவர்ந்து சூழ்ச்சிகளை மேற்கொண்டது பா.ஜ.க. அதேபோல், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைத்திருப்பது நாட்டுக்கே துரதிருஷ்டமானது” எனவும் சாடியுள்ளார். மேலும், இந்திய தேர்தல் நடைமுறைகள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது எனவும் சோனியா காந்தி கூறினார்.

banner

Related Stories

Related Stories