அரசியல்

வாக்குப்பெட்டிகளை மாற்ற பா.ஜ.க. முயற்சி.. காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ். அழகிரி அறிவுரை!

கருத்துக் கணிப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

வாக்குப்பெட்டிகளை மாற்ற பா.ஜ.க. முயற்சி.. காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ். அழகிரி அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று தேசிய ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜகவுக்கே ஆதராவக இருந்தன.

இந்த நிலையில், இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, கருத்துக்கணிப்பு முடிவுகளில் நம்பகத் தன்மையே இல்லை. இதனை பாஜக வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தியுள்ளது என சாடியுள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு இதேப்போல், வெளியிட்டப்பட்ட கருத்துக் கணிப்புகள் முற்றிலும் தவறாகவே அமைந்தது. ஆகையால் கருத்துக் கணிப்பை வைத்து நாடகம் செய்ய திட்டமிட்டிருக்கும் பாஜகவின் செயல் தெளிவாகவே தெரிகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு, வாக்குப்பெட்டிகளை மாற்றி மோசடியில் ஈடுபட பாஜக முயற்சி செய்து வருகிறது. எனவே வாக்கு எண்ணும் மையங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் இரவு, பகல் பாராமல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கே.எஸ். அழகரி அறிவுறுத்தியுள்ளார்.

இதுவரை கண்டிராத வகையில், தேர்தல் ஆணையம் முறைகேடாக செயல்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் அதிகரித்துள்ள தண்ணீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் எனவும் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories