அரசியல்

மின்வெட்டு ஏற்படுத்தி பணப்பட்டுவாடா செய்யும் அ.தி.மு.க - தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார்

தமிழகத்தில் நாளை நடக்கவுள்ள இடைத்தேர்தல் தொகுதியான ஒட்டப்பிடாரத்தில் மின்வெட்டு ஏற்படுத்தி, அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார்.

மின்வெட்டு ஏற்படுத்தி பணப்பட்டுவாடா செய்யும் அ.தி.மு.க - தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இடைத்தேர்தல் நடைபெறும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.கவினர் செயல்படுவதாக தி.மு.க சார்பில் தேர்தல் அதிகாரியுடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் புகார் மனு அளித்த பின், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர் சந்திப்பின் போது பேசியதாவது,” நாளை இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் தூத்துக்குடியில் உள்ள ஒட்டப்பிடாரம் தொகுதியில், மின்வாரியத்தின் வாகனத்தின் மூலம் அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.

மின்வெட்டு ஏற்படுத்தி பணப்பட்டுவாடா செய்யும் அ.தி.மு.க - தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார்

ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மின்வெட்டு ஏற்படுத்தி, அதனை சீர்செய்வது போன்று EB வேனில் வைத்து வாக்குக்கு பணம் கொடுக்கும் பணியில் அ.தி.மு.கவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தகவலை அறிந்த நொடியில், தேர்தல் ஆணையத்துக்கு தொலைப்பேசி மூலம் புகார் அளிக்கப்பட்டுவிட்டது. அதனை அடுத்து, இன்று காலை, தேர்தல் ஆணையரிடம் நேரில் புகார் மனு அளித்துள்ளோம். தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

இது மட்டுமில்லாமல், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் திருப்பரங்குன்றத்திலும் அ.தி.மு.கவினரின் பணப்பட்டுவாடா செயல்கள் அரங்கேறி வருவதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories