அரசியல்

சிலை அரசியல் செய்து நுழைய நினைக்கும் மோடி - மம்தா பானர்ஜி தடாலடி!

தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வின் சகோதர அமைப்பு போல செயல்படுகிறது என ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை உடைப்பு விவகாரத்தில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிலை அரசியல் செய்து நுழைய நினைக்கும் மோடி - மம்தா பானர்ஜி தடாலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொல்கத்தாவில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே கடும் வன்முறை ஏற்பட்டது. இதைதொடர்ந்து, சீர்திருத்தவாதி ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஒரு கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். பெண் கல்வி முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக நாட்டமுடையவர். பெண்களுக்காக 18ம் நூற்றாண்டில் அவர் கட்டிய பள்ளிகள் மட்டும் 35 , ஆம் அன்னிபெசன்ட் கல்கத்தா வரும் முன்பே அவர் பெண் கல்வியினை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் கமிஷனை குறை சொல்கின்றன. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 9 தொகுதிகளில் தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு பிரசாரம் 17-ம் தேதியுடன் முடியும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வன்முறை காரணமாக நாளை 16-ம் தேதி இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிலை அரசியல் செய்து நுழைய நினைக்கும் மோடி - மம்தா பானர்ஜி தடாலடி!

இது குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது; நேற்று இரவு தான் தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் பா.ஜ.க மீது நடவடிக்க எடுக்க புகார் கொடுத்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கூட்டம் முடிந்த பிறகு எந்த கூட்டமும் நடத்த அனுமதி மறுத்துள்ளது. தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் சகோதர அமைப்பு போல செயல்படுகிறது. இது ஒருதலைப்பட்சமான முடிவு. நாட்டில் உள்ள அனைவரும் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.விடம் விற்றுவிட்டது. இந்த பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை! உண்மையை சொல்லியதற்கு சிறை என்றாலும் நான் தயாராக இருக்கிறேன்.

பிரதமர் மோடி சொல்கிறார் வித்யாசாகர் சிலை மீண்டும் நிறுவப்படவேண்டும் என்று. மேற்கு வங்காளத்தில் பணம் இல்லாமல் இல்லை ஆனால் இதனால் தேசமாக்கப்பட்ட 200 ஆண்டுகள் வரலாற்று பாரம்பரியத்தை மீண்டும் கொடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜவினர் நாங்கள் தான் சிலையை உடைத்தாக பொய் கூறுகிறார்கள். நாங்கள் ஆதாரத்துடன் வீடியோ கொடுத்துள்ளோம். இந்த வன்முறைக்கு யார் காரணம் என்று. நிச்சயம் குற்றம் நிரூபிக்கப் பட்டதும் வன்முறை செய்தவர்கள் சிறைக்கு தள்ளுவோம். என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories