அரசியல்

மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய யோகி ஆதித்யநாத் & ஸ்மிருதி இராணிக்கு தடை!

மேற்கு வங்க மாநிலத்தில் உ.பி முதல்வர் யோகி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது அம்மாநில அரசு.

மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய யோகி ஆதித்யநாத் & ஸ்மிருதி இராணிக்கு தடை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகிற மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள் தீவிரவாக தத்தம் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். தற்போது அவர்கள் பரப்புரையில் ஈடுபட மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.

இதேபோல், நேற்று மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூரில் அமித்ஷா தலைமையில் நடைபெற இருந்த பேரணிக்கு தடை விதித்தும், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கவும் தடை விதித்திருந்தது அம்மாநில அரசு.

இந்த அனுமதி மறுப்பு மற்றும் தடை விதிப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்டது என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories