அரசியல்

“மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே காங்கிரஸ் பாடுபடுகிறது” : வாக்களித்தபின் ராகுல் பேட்டி

மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே காங்கிரஸ் பாடுபடுகிறது என டெல்லியில் வாக்களித்தபின் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். 

“மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே காங்கிரஸ் பாடுபடுகிறது” : வாக்களித்தபின் ராகுல் பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 118 தொகுதிகளுக்கு மேலும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

அதன்படி, ஆறாவது கட்டமாக இன்று பீகாரில் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மத்திய பிரேதசம் 8, உத்தர பிரதேசம் 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசாரும், மத்தியப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

“மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே காங்கிரஸ் பாடுபடுகிறது” : வாக்களித்தபின் ராகுல் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள அவுரங்கசீப் லேன் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

ராகுல் காந்தி தனது வாக்கை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம், “மக்களே உயர்ந்தவர்கள், மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவே காங்கிரஸ் பாடுபடுகிறது! விவசாயிகள் பிரச்னை, நிர்வாக ஊழல், போன்றவை முக்கிய பிரச்சனையாக இந்த தேர்தலில் முன்னிறுத்தப்படுகிறது. நரேந்திர மோடி தனது பிரசாரத்தில் வெறுப்பை பயன்படுத்தினார். நாங்கள் அன்பைப் பயன்படுத்தினோம். இந்த தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories