அரசியல்

பொது வாழ்வின் அடிப்படை நல்லொழுக்கங்களை மீறுவதே மோடியின் பண்பு: ராஜ் தாக்கரே தாக்கு!

”மனசாட்சியே இல்லாமல் பொது வாழ்வின் அடிப்படை நல்லொழுக்கங்களை மீறுவது மோடியின் பண்புகளை அடையாளப்படுத்தும் விஷயம்” என ராஜ் ராஜ் தாக்கரே கண்டித்துப் பேசியுள்ளார்.

பொது வாழ்வின் அடிப்படை நல்லொழுக்கங்களை மீறுவதே மோடியின் பண்பு: ராஜ் தாக்கரே தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ராஜிவ் காந்தியை ஊழல்வாதி” என அவதூறாக பேசினார். மோடியின் இந்த பேச்சுக்கு கங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜீவ் காந்தி குறித்து மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறை யை மீறியுள்ளதாக தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித், ராஜீவ் சுக்லா ஆகியோர் தேர்தல் ஆணையர்களை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி குறித்த, மோடியின் சர்ச்சைக் கருத்துக்கு மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜ் தாக்கரே, “நரேந்திர மோடியின் பண்புகளை அடையாளப்படுத்தும் விஷயங்கள் மூன்று; அவை, வெறுப்பு, முடிவில்லாத பொய்கள், மனசாட்சியே இல்லாமல் பொது வாழ்வின் அடிப்படை நல்லொழுக்கங்களை மீறுவது” ஆகியவைதான் என்று சாடியுள்ளார்.“மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குறித்து மோடி பேசிய வார்த்தைகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன; இதை நிச்சயமாக நம் நாடு மன்னிக்காது” என்றும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories