அரசியல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

டெல்லியில் வருகின்ற 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு டெல்லியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

அவ்வகையில், டெல்லி மோதி பாக் பகுதியில் இன்று மாலை திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்தார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். பிரச்சாரம் தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென வாகனத்தில் ஏறிய நபர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முகத்தில் அடித்தார். இதனால் அவர் நிலை குலைந்தார்.

உடனடியாக தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்த தொண்டர்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர். அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

banner

Related Stories

Related Stories