அரசியல்

பெண் அதிகாரிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை : இரா.முத்தரசன் வலியுறுத்தல்!

மதுரையில் வாக்கு எண்ணிக்கை ஆவண அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

பெண் அதிகாரிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை :  இரா.முத்தரசன் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், ஆவணங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

“நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் தாசில்தார் அதிகாரி நுழைந்துள்ளார். அவர் யார் சொல்படி அந்தப் பணியை மேற்கொண்டார் என்பதை விசாரிக்க வேண்டும். அதை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும். பெண் அதிகாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories