அரசியல்

இன்றுடன் முடிவடைகிறது தேர்தல் பிரச்சாரம் 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. 

இன்றுடன் முடிவடைகிறது தேர்தல் பிரச்சாரம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Mohan Prabhaharan
Updated on

18ம் தேதி நடக்கவுள்ள 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 நாடாளுமன்றத் தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த மாதம் 20ம் தேதி திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், 25 நாட்களாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை அவர் 50க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறார். இந்நிலையில், அவர் திருவாரூரிலேயே தனது தேர்தல் பிரச்சாரத்தை முடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் வாக்குப்பதிவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 11ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது, ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிதடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றன. அதனால், 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories