அரசியல்

ஆர்.பி. உதயகுமாரின் அறையில் எவ்வளவு பணம் சிக்கியது? - அமைதி காக்கும் வருமான வரித்துறை 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை இணைந்து நேற்று இரவு சோதனை நடத்தினர்.

சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஹாஸ்டல் 
சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஹாஸ்டல் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தேர்தல் கண்காணிப்புக் குழு மற்றும் வருமான வரித்துறை சார்பில் இது வரை தமிழகத்தில் 139 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

139 கோடி ரூபாயில், வருமானவரித்துறை மட்டும் 55 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது. ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு தலா 2,000 ரூபாய் கொடுப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை இணைந்து சோதனை நடத்தினர்.

பிளாக் சி-யில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறை உள்ளிட்டு, 3 அறைகளில் சோதனை நடந்தது. 2 மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனையில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இது பற்றி தங்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ தகவல் அளிக்கவில்லை என்று சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சோதனை முடிவில் தகவல் ஏதும் வெளியிடப்படாததால், ஆளுங்கட்சிக்கு வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories