உணர்வோசை

‘பராசக்தி’ படம் வெளியாகி 70 ஆண்டுகள்.. இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் கலைஞரின் வசனம்!

கலைஞர் வசனத்தில் ‘பராசக்தி’ படம் வெளியாகி இன்றோடு 70 வருடங்கள் ஆகின்றன.

‘பராசக்தி’ படம் வெளியாகி 70 ஆண்டுகள்.. இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் கலைஞரின் வசனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

‘பராசக்தி’ படம் என்றதும் நமக்கு சிவாஜிதான் ஞாபகம் வருவார். நீதிமன்ற காட்சி ஞாபகம் வரும். சிவாஜி என்ற மகத்தான நடிகனை கண்டெடுத்தது ‘பராசக்தி’ படம்தான் என்றாலும், அதன் கதை சிவாஜியை பற்றியது அல்ல. ‘கல்யாணி’ என்ற பெண் கதாபாத்திரத்தை பற்றியது. ஆணாதிக்கமும் அதற்கு துணை போகும் புரோகிதமும் எப்படி கல்யாணி என்ற பெண்ணை துன்புறுத்தி விரட்டுகிறது என்பதுதான் கதை.

தங்கை கல்யாணியின் திருமணத்துக்கு பர்மாவில் இருந்து அண்ணன் குணசேகரன் கப்பலில் கிளம்புகிறான். போரால் பயணம் தடைபடுகிறது. சில மாதங்களுக்கு பின் மீண்டும் பயணம் தொடங்கி, தமிழ்நாட்டுக்கு அண்ணன் வருதற்குள், கல்யாணிக்கு குழந்தை பிறந்துவிடுகிறது. கணவன் விபத்தில் மரிக்கிறான். அப்பாவும் இறக்கிறார். கல்யாணி நடுத்தெருவில் நிற்கிறாள். வந்த இடத்தில் அண்ணனின் பணமெல்லாம் திருடு போகிறது. தங்கையை தேடி அலைகிறான். வாழ்வாதாரத்துக்காக திருடுகிறான். கிறுக்கனாக நடிக்கிறான். தங்கையை கண்ட பிறகும் தான் தான் அண்ணன் என சொல்ல முடியாத சூழல். அவனிடம் ஈர்க்கப்படும் விமலா அவன் கதை விசாரிக்கிறாள். நடந்தவற்றை சொல்கிறான். அவள் காதலிக்க தொடங்குகையில், தங்கையை தேடிச் சென்றுவிடுகிறான். வாழ வழியின்றி கல்யாணி குழந்தையை கொன்று விடுகிறாள். போலீஸ் பிடிக்கிறது. குடும்பம் சேர்ந்ததா இல்லையா என்பது மிச்சக்கதை.

‘பராசக்தி’ படம் வெளியாகி 70 ஆண்டுகள்.. இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் கலைஞரின் வசனம்!

இந்தக் கதைக்குள் எங்கேனும் புரட்சி பேசிட முடியுமா? அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட குடும்பக்கதை! இன்றைய கதாசிரியர்களிடம் எல்லாம் சிக்கியிருந்தால், இந்த கதை என்னவாகி இருக்குமென யோசித்து பாருங்கள்.

’கல்யாணி’ பாத்திரம் மட்டுமல்ல, இன்னொரு பெண் பாத்திரமும் படத்தில் உண்டு!

“இப்போதும் உன்னை குற்றம் சாட்டுகிறேன். நீ ஒரு சுயநலவாதி! உன் சொந்த தங்கைக்காக, அவள் சோக வாழ்வுக்காக சுருண்டு போனாயே தவிர, நாட்டிலே எத்தனை தங்கைகள் நலிந்து கிடக்கிறார்கள் என நினைத்தாவது பார்த்தாயா? அதற்காக உன் நாவு அசைந்தது உண்டா, உன் நெஞ்சு துடித்ததுண்டா?”

“எனக்கேன் துடிக்க வேண்டும்? இந்த கேடு கெட்ட சமுதாயத்துக்கு, நன்றி கெட்ட நாட்டுக்கு, ஏழைகளை மிதித்து வாழும் எத்தர்களுக்கு துடிக்க வேண்டும் நெஞ்சு, உயிர், உடல் எல்லாம்… எனக்கேன் துடிக்க வேண்டும்?”

“அந்த சமுதாயத்தில் நீயும் ஒரு அங்கம்!”

“ஆனால் நான் ஏழை…..”

“அப்படி ஆக்கப்பட்டாய்!”

இந்த உரையாடல் நடப்பது குணசேகரனுக்கும் அவன் காதலி விமலாவுக்கும். வாழ்க்கையையும் சமூகத்தையும் குறை கூறியே வாழ்ந்து வரும் குணசேகரனிடம் அவனது தவறை எடுத்து சொல்லி, சமூகத்துக்காக அவன் சிந்திக்க வேண்டும் என்ற அறிவை வழங்குவது படத்தில் ஒரு பெண்ணே.

‘பராசக்தி’ படம் வெளியாகி 70 ஆண்டுகள்.. இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் கலைஞரின் வசனம்!

இச்சமூகம் பேசும் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக வசனம் எழுதியவர் கலைஞர். அதனாலேயே அவர் காலத்துக்கும் நிற்கிறார். அவரது வசனங்கள் பார்ப்பனீயத்தின் ஆணி வேரை அசைத்து பார்ப்பவை. சுருங்கக்கூறின், இந்தியச் சமூக நீதிக்கான வசனத்தை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஆதிக்கத்துக்கு எதிரான இந்தியா அரசியலின் வசனமே கருணாநிதி!

’பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்!

ஆம், காலத்தால் நிலைத்திட்ட கலைஞர்தான் கருணாநிதி!

banner

Related Stories

Related Stories