சினிமா

“ஆக்கமோ நட்சத்திரப் பட்டாளமோ நல்ல சினிமாவுக்கு தேவையில்லை..” - Netflix-ன் 'Attention Please' !.

ஆக்கத்தைப் பொறுத்தவரை மலையாள சினிமாவே எளிமையான சினிமாதான் என்றாலும் அதிலும் எளிமையாக இருக்கும் ஆக்கம்தான் 'அட்டென்ஷன் ப்ளீஸ்' படத்தில் இருக்கிறது.

“ஆக்கமோ நட்சத்திரப் பட்டாளமோ நல்ல சினிமாவுக்கு தேவையில்லை..” - Netflix-ன் 'Attention Please' !.
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மலையாள சினிமா பெற்றிருக்கும் மற்றொரு க்ரீடம் 'Attention Please' !

படத்தில் வணிக சினிமாவுக்கான அலங்காரங்கள் இல்லை, யதார்த்தம் இருக்கிறது. ஆக்கத்தைப் பொறுத்தவரை மலையாள சினிமாவே எளிமையான சினிமாதான் என்றாலும் அதிலும் எளிமையாக இருக்கும் ஆக்கம்தான் 'அட்டென்ஷன் ப்ளீஸ்' படத்தில் இருக்கிறது. ஆனால் படத்தின் தாக்கம் உங்களை சில நாட்களுக்கேனும் பீடித்திருக்கும். படாடோப ஆக்கமோ நட்சத்திரப் பட்டாளமோ நல்ல சினிமாவுக்கு தேவையில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திருக்கிறது இப்படம்.

“ஆக்கமோ நட்சத்திரப் பட்டாளமோ நல்ல சினிமாவுக்கு தேவையில்லை..” - Netflix-ன் 'Attention Please' !.

ஓர் ஐந்து பேர் இருக்கும் வீட்டில் கதை தொடங்குகிறது. ஐந்து பேரும் திருமணமாகாதவர்கள். இளைஞர்கள். பெரும்பாலும் உணவும் திரைப்படங்களும்தான் அவர்களின் உரையாடலாக இருக்கிறது. ஹரி ஒரு திரைக்கதை எழுத்தாளராக விரும்பும் இளைஞன். வருமானம் கிடையாது. அஜித், ஜிதின், யாது, ஹிமல் ஆகிய நண்பர்களுடன் அந்த வீட்டில் இருக்கிறான். ஜிதின்தான் ஹரிக்கு முதல் பழக்கம். அவன் வழியாகத்தான் இந்த வீடும் வீட்டில் இருக்கும் பிறரும் அவனுக்கு.

வருமானமில்லாமல் சினிமா ஆசையில் இருப்பவன் என்பதால் ஹரி மீது இளக்காரத்துடன் இருக்கின்றனர் மற்ற நால்வரும். குறிப்பாக ஜிதின் அதிகமாகவே ஹரியை மட்டம் தட்டுகிறான். ஹரியின் திரைக்கதைகள் நன்றாக இல்லை என்றும் அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே வந்த திரைப்படங்களிலிருந்து திருடப்பட்டவை என்றும் ஹரியைக் குறைத்து மட்டுமே பேசுபவனாக ஜித்தின் இருக்கிறான். மற்ற அனைவருமே ஹரி சம்பாதிக்காமல் இருப்பதைக் கூட குறை கூறவில்லை. அவன் சினிமாவுக்கு லாயக்கற்றவன் என்பதையே மீண்டும் மீண்டும் வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

“ஆக்கமோ நட்சத்திரப் பட்டாளமோ நல்ல சினிமாவுக்கு தேவையில்லை..” - Netflix-ன் 'Attention Please' !.

இரவு அனைவரும் மது அருந்துகின்றனர். பொழுது போக்க ஹரியிடம் திரைக்கதை சொல்லச் சொல்கின்றனர். அவனு கதைகள் சொல்கிறான். பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். மீண்டும் ‘திருடப்பட்டவை’, ‘நன்றாக இல்லை’, ‘சுமார்’ போன்ற கருத்துகள்தான் முன்வைக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக ஹரியின் பால் ஒருவகை பாரபட்சம் தொடர்ந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

“ஆக்கமோ நட்சத்திரப் பட்டாளமோ நல்ல சினிமாவுக்கு தேவையில்லை..” - Netflix-ன் 'Attention Please' !.

மொட்டை மாடியில் மது அடிக்கலாமென இடம் மாற்றப்படுகிறது. அஜித்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவன் வேலையாக வெளியே செல்கிறான். ஹரி தொடர்ந்து கதை சொல்கிறான். ஒரு பேய்க் கதை. கதை விறுவிறுப்பாக செல்கிறது. ஹரி அவர்களுக்குள் தன் கதையின் தாக்கத்தை மெய்யாகவே செலுத்துகிறான். கதை முடிகிறது. ஹிமலும் யாதுவும் கதை நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். ஜிதின் மட்டும் நன்றாக இல்லை என்கிறான்.

அந்தக் கதை ஏற்கனவே சினிமாவில் வெளியான கதை என சொல்கிறான். ஹரிக்கும் ஜிதினுக்கும் வாக்குவாதம் ஆகிறது. ஒரு கட்டத்தில் கையிலிருக்கும் மது பாட்டிலை உடைத்து, ஜிதின் வயிற்றில் குத்துகிறான் ஹரி. ஜிதின் சரிகிறான். மற்ற இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

“ஆக்கமோ நட்சத்திரப் பட்டாளமோ நல்ல சினிமாவுக்கு தேவையில்லை..” - Netflix-ன் 'Attention Please' !.

ஜிதினைக் காப்பாற்ற மற்ற இருவரும் முனைகையில் அவர்களும் கொல்லப் போவதாக மிரட்டுகிறான் ஹரி. அவர்கள் அமைதியாகி விடுகின்றனர். ஜிதினை மற்ற இருவரின் அருகே சாய்த்து வைக்கிறான் ஹரி. ஜிதின் உடலில்லை உயிரில்லை. மூவருக்கும் மீண்டும் ஒரு கதையைச் சொல்லத் தொடங்குகிறான் ஹரி. இக்கதை அவனைப் பற்றிய கதை.

அடுத்தடுத்து என்னவாகிறது, மற்றவர்கள் என்னவாகினர், ஹரி சிக்கினானா இல்லையா என்பதே மிச்சக்கதை. விறுவிறுப்பாகவும் தீவிரமாகவும் திரைக்கதை சொல்லப்படுகிறது.

படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருக்கிறது. பார்த்து விடுங்கள்.

banner

Related Stories

Related Stories