உணர்வோசை

கல்யாண வாழ்க்கையில் எதிர்பார்க்காதீர்கள்.. எதிர்பார்த்தால் ஏமாறுவீர்கள் ! ஏன் இவ்வாறு நடக்கிறது ?

திருமணம் ஆகிவிட்டது என்ற உரிமை உணர்வே, உடைமை உணர்வே அந்த மதிப்பையும் குலைக்க வல்லது. அதை மாத்திரம் கவனமாக தவிர்த்துவிட்டால், நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி!

கல்யாண வாழ்க்கையில் எதிர்பார்க்காதீர்கள்.. எதிர்பார்த்தால் ஏமாறுவீர்கள் ! ஏன் இவ்வாறு நடக்கிறது ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

காதல்கள் ஏன் தோற்கின்றன என்ற கேள்விக்கு காதல்கள் திருமணத்தில் முடிவதால்தான் தோற்கின்றன என பதில் சொல்வார் ஓஷோ ரஜ்னீஷ்.

நம் சமூகம் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்று காதல் திருமணம் பற்றிய நம்பிக்கை. காதல் திருமணம் செய்து கொண்டால் சந்தோஷமாக இருக்க முடியுமென சொல்கிறோம். ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு ஓரளவுக்கு கசப்பும் வந்து ஒட்டிக் கொள்கிறது. அச்சமயத்தில் காதல் திருமண முடிவை மறுபரிசீலித்திருக்கலாமோ என்கிற யோசனைக்கும் செல்லும் அளவுக்கு மனம் வெதும்பி விடுகிறது.

கல்யாண வாழ்க்கையில் எதிர்பார்க்காதீர்கள்.. எதிர்பார்த்தால் ஏமாறுவீர்கள் ! ஏன் இவ்வாறு நடக்கிறது ?

ஏன் இப்படி?

அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளத் தவறுகிறோம்.

காதல் வேறு, குடும்பம் முற்றிலும் வேறு.

முன்னது பால் ஈர்ப்பு பின்னது பொறுப்பு சுமப்பு.

போலவே ஆண் வேறு பெண் முற்றிலும் வேறு.

முன்னது புறவய சிந்தனை. பின்னது அகவய சிந்தனை.

ஆதலால், கல்யாண வாழ்க்கையில் ரொம்பவும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தால் ஏமாறுவீர்கள். எதிர்பார்க்கவில்லை எனில் ரசிப்பீர்கள். இந்த தெளிவும் பாருங்கள், கணவன் மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும். ஒருவர் மாத்திரம் இந்த தெளிவை கொண்டிருந்தாலும் சிக்கல்தான். அவர் பேசுவது, விளக்குவது எல்லாம் அடுத்தவருக்கு greek and latin-தான். மட்டுமல்லாமல், கல்யாணம் செய்வது எவ்வளவு அற்புதமோ அதே அளவுக்கு அற்புதம்தான் பிடிக்கவில்லை எனில் விட்டு விலகுவதும். அப்பப்பா, இடியாப்பமாய் எவ்வளவு சிக்கல்!

நல்ல கல்யாணம் அல்லது காதல் அல்லது ஆண்-பெண் உறவுக்கு என்னதான் வழி?

மதிப்பு!

கல்யாண வாழ்க்கையில் எதிர்பார்க்காதீர்கள்.. எதிர்பார்த்தால் ஏமாறுவீர்கள் ! ஏன் இவ்வாறு நடக்கிறது ?

நன்றாக தேடுங்கள். பழகுங்கள். உங்களுக்கே தெரியும். சிலரிடம் நேசம் என்பதை தாண்டி மதிப்பும் ரசிப்பும் கொள்வீர்கள். அவர்களை கண்டடையுங்கள். அவர்களுக்கும் உங்களை போன்ற இன்ட்ரெஸ்ட் லெவல் இருந்தால் மணம் முடிக்கலாம். அங்கு பிரச்சினைகளை தாண்டி அடுத்தவர் மீதுள்ள மதிப்பு வாழ்க்கை ஓட்டத்துக்கு ஈடு கொடுத்துவிடும்.

மதிப்பு எப்படி வருகிறது? வீட்டில் சொல்லி அனுப்புவார்களே கணவனே கண் கண்ட தெய்வம், நிற்க சொன்னால் நிற்க வேண்டும், வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம். அந்த பாணி மதிப்பு அல்ல நான் சொல்வது. அதற்கு பெயர் அடிமைத்தனம்.

உங்களை போன்ற விருப்பு வெறுப்பு கொண்ட, சற்றே நீங்கள் விரும்பக்கூடிய விதத்தில் இருக்கிற, ஒருவருக்கொருவர் சிறந்த கம்பேனியனாக (லவ்வராகவோ ஒய்ஃபாகவோ அல்ல, கம்பேனியனாக) இருப்பவரிடம்தான் உங்களுக்கு மதிப்பு வரும். அந்த வகையில் மணம் முடிப்பவர்கள் சற்றே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடமும் ஒன்று இருக்கிறது. திருமணம் ஆகிவிட்டது என்ற உரிமை உணர்வே, உடைமை உணர்வே அந்த மதிப்பையும் குலைக்க வல்லது. அதை மாத்திரம் கவனமாக தவிர்த்துவிட்டால், நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி!

banner

Related Stories

Related Stories