உணர்வோசை

கணவன்-மனைவி உறவு, காதல், காமம், கற்பு எல்லாம் எதற்கு ? குடும்ப உறவின் அடிப்படை என்ன ?

100% ஒத்திசைவை கொண்டவர்கள் தெளிவாக கல்யாணம் செய்யாமல் இருப்பார்கள். செய்தாலும் ஒருவரையொருவர் மதித்து ஒரு கட்டத்தில் பிரிந்து விலகி சென்றுவிடுவர்.

கணவன்-மனைவி உறவு, காதல், காமம், கற்பு எல்லாம் எதற்கு ? குடும்ப உறவின் அடிப்படை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இன்றைய தலைமுறையினருக்கு திருமணம் செய்து கொள்வதில் பெரும் தயக்கம் இருக்கிறது.

முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, இந்த கல்யாணம், குடும்பம் என்பதற்கெல்லாம் பெரிய புனிதம் ஒன்றுமில்லை என்பதைத்தான். குழந்தைகள் அனாமத்தாக பிறந்து தான்தோன்றிகளாக உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, இரண்டு எஸ்கார்ட்டுகளை நியமித்து, அரசும் சமூகமும் உருவாக்கிய செட்டப்தான் குடும்பம். அதை அங்கீகரிக்க கல்யாணம் என ஒரு செயல்முறை. அவ்வளவுதான். மற்றபடி அதற்குள் இருக்கும் கணவன்-மனைவி உறவு, காதல், காமம், கற்பு, பண்பு, ஒழுக்கம் என்பதெல்லாம் அந்த செட்டப் தொடர்வதற்கும் நம்முடைய பற்றுதல் குறையாமல் இருப்பதற்கும் நாமே போட்டுக்கொண்ட பொன் விலங்குகள்.

இந்த குடும்பம் என்ற அமைப்புதான் சமூகத்தின் அடிப்படை அலகு என்றாகிவிட்ட நிலையில் இதை கொண்டு இயங்கும் காதல், ஆண்-பெண் உறவு புரிதல் ஆகியவற்றை புரிந்துகொள்வது அத்தியாவசமாகி விடுகிறது.

கணவன்-மனைவி உறவு, காதல், காமம், கற்பு எல்லாம் எதற்கு ? குடும்ப உறவின் அடிப்படை என்ன ?

ஒரே கூரையின் கீழ் வாழும் இருவர் (இரண்டு நண்பர்களாகக் கூட இருக்கலாம்) கண்டிப்பாக பிரச்சினைகளோடுதான் இருப்பர். ஏன்? ஒரே சிந்தனை கொண்டவரென உலகில் எவரும் இல்லை. ஓரளவுக்கு ஒத்துப்போகக் கூடியவர்கள் வேண்டுமானால் இருக்கலாம். அதாவது 60%, 70%, 80%, 90% அப்படி. 90% ஆகவே இருந்தாலும் மிச்சமிருக்கும் 10% விஷயங்களிலாவது கருத்து பேதங்கள் இருக்கும். அந்த பேதங்கள், சண்டை சச்சரவுகளை இயல்பாகவே ஏற்படுத்தும். அந்த பேதங்களை மீறி சுமூகத்தை கொண்டு வரும் வேலையை செய்யத்தான் அந்த 90% இருக்கிறது. இந்த ஒத்திசைவு குறைய குறைய பேதங்கள், பிளவுகள் ஆகி இன்னும் பெரிதாக மாறக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம்.

அப்படியெனில் 100% ஒத்திசைவு என்பதே இல்லையா?

இருக்கிறது. அந்த 100% ஒத்திசைவை கொண்டவர்கள் தெளிவாக கல்யாணம் செய்யாமல் இருப்பார்கள். செய்தாலும் ஒருவரையொருவர் மதித்து ஒரு கட்டத்தில் பிரிந்து விலகி சென்றுவிடுவர்.

ஆனால், காதலில் மட்டும் எல்லாம் சரியாக இருக்கிறதே? 100% ஒத்திசைவு இருக்கிறதே?

கணவன்-மனைவி உறவு, காதல், காமம், கற்பு எல்லாம் எதற்கு ? குடும்ப உறவின் அடிப்படை என்ன ?

காதலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது மேலே சொன்ன ‘ஒரே கூரை’ is missing என்பதை. வெவ்வேறு கூரைகளிலிருந்து வந்து காதலித்து திரும்ப அந்தந்த கூரைகளுக்கு சென்று விடுவதால் பேதங்கள் தெரிவதில்லை. அப்படி இருந்துமே யோசித்து பாருங்கள். காதலித்த புதிதில் அனைத்தும் சொர்க்கமாக இருக்கும். அப்படியே இரண்டு, மூன்று வருடங்கள் கொடுத்து அந்த காதலை நீட்டித்து பாருங்கள். நிறைய சண்டைகள், கோபதாபங்கள், வெறுப்பு, ஆயிரக்கணக்கில் ஃபோன் பில் என நிலைமை மாறியிருக்கும். இன்னொன்றும் இருக்கிறது. எப்போதாவது சந்திக்கும்போது ஏற்படும் பரவசம் இதையெல்லாம் இல்லாமலும் ஆக்கிவிடும். சந்தித்துவிட்டு திரும்பியதும் அடுத்து சந்திப்பதை பற்றி யோசிப்பதில் ஆரம்பித்து, மறுபடியும் ‘ஏன் ஃபோன் பண்ணல, ஒரு மெசேஜ் கூட பண்ண தோணல’ என சண்டைகள் போட்டு அடுத்த சந்திப்புக்கு மெல்ல மனம் அடி போடத் துவங்கியும் விடும். தள்ளி தள்ளி இருப்பதால் மட்டும்தான் காதல் ருசி.

அப்படியானால் கல்யாணமே செய்துகொள்ளக் கூடாதா?

கல்யாணம் செய்யலாம். ஆனால் அதை பற்றிய glorified versions ஏதும் வைத்துகொள்ளாமல் இருந்தால் நல்லது. சினிமா காதல், சினிமா வாழ்க்கை போன்றவற்றை எல்லாம் எதிர்பார்த்தால் டுமீல்தான். கல்யாணம் பண்ணியதும் ‘ஏண்டா, நோ டா’வில் தொடங்கி, கொஞ்சிப்பதும் ஈஷிப்பதுமாக தங்கள் காதலை exhibit செய்து கொள்வார்கள். அப்படி நோ டார்லிங், ஹனி என்றவர்கள், வீட்டிலும் சரி கொஞ்ச காலத்துக்கு பிறகும் சரி “அவளே இவளே நாயே பேயே”வாக மாறியிருப்பார்கள்.

ஒரே நெகட்டிவ்வாக பேசுவதாக எண்ண வேண்டாம். இதுதான் உண்மை and உண்மை சுடும்!

banner

Related Stories

Related Stories