சினிமா

"உங்கள் படைப்புகளில் சிறந்தது இது தான்.." - காலா, கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித்துக்கு ரஜினி புகழாரம் !

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் பா.ரஞ்சித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

"உங்கள் படைப்புகளில் சிறந்தது இது தான்.." -  காலா, கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித்துக்கு ரஜினி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் 'மெட்ராஸ்', 'கபாலி', 'அட்டக்கத்தி', 'சார்பட்டா பரம்பரை' உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில், இவரது படைப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் 'நட்சத்திரம் நகர்கிறது'.

காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கும் இப்படமானது காதல் கலந்த அரசியலை எடுத்துக்கூறுகிறது. ஒரு பக்கம் திருநங்கை காதல், மறுபக்கம் லேஸ்பியன் காதல் என்று பல கோணத்தில் கதை களம் நகரும் வண்ணமாக காணப்படுகிறது.

"உங்கள் படைப்புகளில் சிறந்தது இது தான்.." -  காலா, கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித்துக்கு ரஜினி புகழாரம் !

இந்த படம் வெளியானதில் இருந்து பல வகையான விமர்சங்களை சந்தித்தாலும், திரை பிரபலங்களான அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலரும் புகழ்ந்தனர். அந்த வகையில், இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா.ரஞ்சித்தை புகழ்ந்துள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டுக்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை பார்த்துவிட்டு 'இயக்கம், எழுத்து, நடிகர்களின் நடிப்பு, கலை, ஒளிப்பதிவு, இசை போன்றவற்றில் இதுவே உங்கள் சிறந்த படைப்பு' என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டி வாழ்த்தினார். நன்றி சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories