உணர்வோசை

ஆன்மீகம் என்பது ஆன்மாவை வளப்படுத்துவது.. கார்ப்பரேட் குருக்கள் இந்த உண்மையை சொல்வார்களா?

மூளை என்ற சுமையின் உருவகப் படலமாக நாம் உருவாக்கிக் கொண்ட மனம் தான் ஆன்மா என்று கொண்டால் அது உருவாக்கும் உணர்வு நிலைகளை கையாளுவதுதான் ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது ஆன்மாவை வளப்படுத்துவது..  கார்ப்பரேட் குருக்கள் இந்த உண்மையை சொல்வார்களா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஆன்மீகம் என்பது என்ன தெரியுமா?

ஆன்மீகம் என்பது ஆன்மாவை வளப்படுத்துவது.

ஆன்மாவை இயற்கையின், பிரபஞ்சத்தின் ஒரு துளி என கொள்ளலாம். பிரபஞ்ச துளியை அது கொடுத்திருக்கும் இயற்கையை கொண்டு இயக்கித்தான் வளப்படுத்த முடியும். நம் உடலில் இயற்கை என்பது காற்று, மண், நீர் என்பனவாக நிறைந்துள்ளது. மூளை என்ற சுமையின் உருவகப் படலமாக நாம் உருவாக்கிக் கொண்ட மனம் தான் ஆன்மா என்று கொண்டால் அது உருவாக்கும் உணர்வு நிலைகளை கையாளுவதுதான் ஆன்மீகம்.

எல்லா உணர்வு நிலைகளும் உடலுக்குள் உள்ள இயற்கையோடு இயைந்துதான் இயங்கும். கோபம், அழுகை, பதற்றம் போன்ற உணர்வு நிலைகள் ஏற்பட்டால் மூச்சு தடைபடும். நெஞ்சு மேலெழுந்து சுவாசத்தை தேடும். ‘Deep breath எடுத்துக்கோ, பதறாதே’ எனக் கூட சொல்வோமே!

உடல் இயற்கையால் உருவாகி இயற்கையால் இயங்குவது போல், நம் வாழ்க்கையில் இயற்கையை கொண்டிருக்கிறோமா?

மரத்திலிருந்து நிலமிறங்கி, வால் குறைந்து, முதுகெலும்பு நிமிரத்தொடங்கிய வரைதான் மனிதன் இயற்கையிடம் இருந்தான். நெருப்பின் அருமை புரிந்து, அதை உருவாக்கும் வழி தெரிந்து, அதை காக்கவும் தொடங்கி, சித்திரம் படைத்து அடுத்த தலைமுறைக்கு வரலாறாய், கடந்த காலத்தை கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து இயற்கையை இழக்க ஆரம்பித்தான். இன்று முற்றுமாய் இழந்து நிற்கிறோம் அநாதையாய்.

ஆன்மீகம் என்பது ஆன்மாவை வளப்படுத்துவது..  கார்ப்பரேட் குருக்கள் இந்த உண்மையை சொல்வார்களா?

இயற்கையிலிருந்து பிரிந்து செயற்கையாய் உருவாக்கிய சமூக அமைப்பில் பிழைக்க கற்றுக்கொண்டு, இயற்கையையே அழித்துக்கொண்டிருக்கும் மனிதன், எவ்வகையில் தன் உடல் கொண்டிருக்கும் இயற்கையின் வழி மனதை அடைந்து ஆன்ம வலிமை பெற முடியும்?

சிக்கல் புரிகிறதா?

பற்றறுக்க சொல்கிறோம். கோபத்தை அடக்க சொல்கிறோம். வன்முறை அறுக்க சொல்கிறோம். பின், இவை எல்லாவற்றையும் கொண்டிருக்கும் நம் செயற்கை வாழ்க்கை அமைப்புக்குள் வாழ அழைக்கிறோம். எங்கு இருக்கிறது போலித்தனம்?

கார்ப்பரேட் குருக்கள் இந்த உண்மையைச் சொல்ல மாட்டார்கள். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்படும் ப்ரெஷரை எப்படி கண்ட்ரோல் செய்வது, ஸ்ட்ரெஸ் லெவலை எப்படி குறைப்பது, பாஸிட்டிவ் எனர்ஜியை அதிகரித்து வாழ்வில் எப்படி உயர்வது என்பதாகத்தான் இருக்கும் அவர்கள் சொல்கிற ஆன்மீகம்.

நாம் இருக்கும் இந்த பொருளாதாய உலகில் நுகர்வும், இயற்கையற்ற வாழ்வும், பொருள் தேடும் பண்புகளும்தான் பிரச்சினை என அவர்களுக்கு தெரியும். ஆனால் ‘இவற்றையெல்லாம் விடுத்து வாருங்கள், இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை நாடுவோம்’ என சொன்னால் நீங்கள் போக மாட்டீர்கள் அல்லவா? அப்படி போய்விட்டாலும், அவர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை நீங்கள் சம்பாதிக்க வேண்டுமே?

ஆன்மீகம் என்பது ஆன்மாவை வளப்படுத்துவது..  கார்ப்பரேட் குருக்கள் இந்த உண்மையை சொல்வார்களா?

இப்பூவுலகில் மனிதன் திரும்பவும் இயற்கையை நாடி செல்வது மட்டும்தான் சரியான ஆன்மீகமாக இருக்க முடியும். அதை விடுத்து சொல்லப்படும் எதுவும் பாசாங்கு மட்டுமே. இதனால்தான் சித்தர்கள் புரோகித ஆதிக்கத்தை எதிர்த்து, பற்றை துறந்து, காடுகளுக்குள் புகுந்து இயற்கையோடு வாழ்ந்தனர்.

வாழ்க்கையின் இறுதியை, லட்சியங்கள் மற்றும் இலக்குகள் ஏதுமில்லையெனின் (பெரியார், மார்க்ஸ் எல்லாம் இறுதி வரை தொடர்ச்சியாக இயங்கியது இப்படியான லட்சிய இலக்குகளால்தான்) வெறுமையாய், அனைத்தும் கசந்து, தன்னையே கடித்து, உண்டு, மாண்டு போகும் விந்தை பிராணிகளாக மடிந்து போவோம்.

அப்படியெனில் பொருள் வாழ்க்கை வாழும் நமக்கு ஆன்மீகம் என ஏதும் கிடையாதா?

இருக்கிறது. முதலில் இயற்கை சூழலை உருவாக்குதல் கட்டாயம். பொருள் வாழ்க்கைதான் இயங்குசூழல் என்றான பிறகு, அதில் ஏற்படும் பிரச்சினைகள், அகச்சிக்கல்கள், அடுத்தவர் துயர் போன்றவற்றை போக்கும் வழியில்தான் நாம் ஆன்மீகத்தை தேட முடியும். நம் உடலுக்குள் உள்ள இயற்கையை கொண்டு அல்ல. அந்த இயற்கையை நாம் என்றோ அழித்து விட்டோம்.

சற்று சிந்தியுங்கள்.

வேலை முடிந்து அழுத்தத்துடன் வீடு சென்று, குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாமல் தூங்கி, அடுத்த நாள் வெறுமையாய் எழுந்து வேலைக்கு போகிறவர்கள் நம்மில் எத்தனை பேர்?

ஆன்மீகம் என்பது ஆன்மாவை வளப்படுத்துவது..  கார்ப்பரேட் குருக்கள் இந்த உண்மையை சொல்வார்களா?

அடுத்த நாள் என்னவென்ற திட்டம் தெரியாமல் காலச்சக்கரத்தில் மாட்டிய நூலாகத்தானே அனைவரும் வாழ்க்கையை ஓட்டுகிறோம்? அந்த வெறுமை தாங்காமல்தானே நம்மில் சிலர், கொஞ்ச நேரத்தையாவது வாழ்க்கையில் அர்த்தப்படுத்திக்கொள்ள, எழுத்து, இசை என ஒரு படைப்பு செயலை செய்ய விழைகிறோம்?

இப்படிப்பட்ட ஒரு அனர்த்த வாழ்க்கை சூழலில் பொருளை அறுத்தலும் வனம் போதலும் இயற்கை ஆதலும் சமூக பங்களிப்பும் மாத்திரமே ஆன்மீகத் தேடலுக்கான சரியான வழிகள்.

banner

Related Stories

Related Stories