உணர்வோசை

நம் சொந்த அறிவை நம்புவது எப்படி?.. அறிவை பற்றிய விளக்கம் உங்களுக்காக இதோ!

அறிவு சொந்தம் இல்லை என புரிந்த பிறகு அறிவை தேட துவங்குவீர்கள். தேடல் தொடங்கியதுமே தன்னம்பிக்கை மலர்ந்துவிடும்.

நம் சொந்த அறிவை நம்புவது எப்படி?.. அறிவை பற்றிய  விளக்கம் உங்களுக்காக இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இன்றையச் சூழலில் அறிவு மற்றும் தன்னம்பிக்கை சார்ந்து பல விஷயங்கள் பேசப்படுகின்றன. பல மேற்கோள்கள் முன் வைக்கப்படுகின்றன. ‘உன்னையே நீ நம்பு’, ‘உன்னை மிஞ்சுபவர் எவரும் இல்லை’, ‘உனக்கு நீ மட்டும்தான் துணை’, ‘சுயக்காதல் (Self Love) செய்’ என சுயம் சார்ந்த பல கருத்துகளும் அறிவை பற்றிய பல விளக்கங்களும் முன் வைக்கப்படுகின்றன.

இரண்டு கேள்விகள்:

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

நம் சொந்த அறிவை நம்புவது எப்படி?

நமக்கு சொந்த அறிவு என ஒன்று இல்லையென்பதை புரிந்து கொண்டால் தன்னம்பிக்கை வளரத் தொடங்கிவிடும்.

இவ்வுலகில் எதுவுமே variableதான், அறிவு உட்பட!

Variable என்பதை மாறும் தன்மை கொண்டது எனப் புரிந்து கொள்ளலாம்.

நம் சொந்த அறிவை நம்புவது எப்படி?.. அறிவை பற்றிய  விளக்கம் உங்களுக்காக இதோ!

அறிவு என்ற knowledge என்பதே knowing-ல் இருந்துதான் பிறக்கிறது. அறிதல்தான் அறிவுக்கான அடிப்படை. சொந்தமாக ஏற்கனவே அறிவு இருந்தால் அல்லது இருப்பதாக நினைத்தால் புது விஷயங்களை அறிந்து கொள்ள விழைய மாட்டீர்கள். எதையும் அறியாமல் இருந்தால் அறிவு சேராது. தேக்கம்தான் ஏற்படும்.

தனக்கு ஏற்கனவே அறிவு இருக்கிறது என நினைப்பவன் தேங்கிவிடுகிறான். சொல்லப் போனால் அவன் முட்டாளாக தொடங்குவதாகவே கருத வேண்டும். அத்தகையானவர்கள் பெரும்பாலும் தன்னகங்காரம் கொண்டிருப்பார்கள். அளவு கடந்த தன்முனைப்பு கொண்டிருப்பார்கள்.

தன்முனைப்பு என்பது இரவில் கறுப்புக் கண்ணாடி போடுவது போல. கண்ணும் தெரியாது. கண்ணாடியும் தெரியாது. அறிவில்லை என்பது தெரியவே ஒரு அறிவு இருக்க வேண்டும் பாருங்கள். அதுவே இருக்காது. தன்னை அறிவாளி என அறிவித்து முட்டாளாகிக் கொண்டே இருப்பார்கள்.

நம் சொந்த அறிவை நம்புவது எப்படி?.. அறிவை பற்றிய  விளக்கம் உங்களுக்காக இதோ!

தேங்காததே அறிவு!

அறிதலுக்கு முடிவே இல்லை. எந்த வயதிலும் எந்த நிலையிலும் அறிந்து கொண்டே இருக்கலாம். அப்படி இருந்தால் மட்டுமே அது அறிவு. அறிவுடையோரிடம் தன்முனைப்பு இருக்காது. பணிவு இருக்கும். தன்னகங்காரம் இருக்காது. வித்யாகர்வம் இருக்கும். ஓய்வு இருக்காது. தேடல் இருக்கும். அவர்களின் வாழ்வில் முற்றுப்புள்ளி என்பதே இருக்காது.

அறிவை சொந்தமாக்கிக் கொள்ளவே முடியாது. இந்த பூமியில் ஏற்கனவே இருந்ததைதான் தெரிந்து கொள்கிறோம். தெளிவுபடுத்துகிறோம். மீண்டும் தெரியப்படுத்துகிறோம். இல்லாததை ஆக்கவும் இல்லை. இருப்பதை கொண்டு போக போவதும் இல்லை. அறிவு முக்காலத்துக்கானது. இருந்தது. இருக்கிறது. இனியும் இருக்கும்.

நம் சொந்த அறிவை நம்புவது எப்படி?.. அறிவை பற்றிய  விளக்கம் உங்களுக்காக இதோ!

அறிவு என்பது பொதுவுடைமை. சொந்தம் கொண்டாடாதீர்கள். சொந்தம் கொண்டாடாதவரை இருக்கும். சொந்தம் கொண்டாடினால் ஓடிவிடும். அறிவு சொந்தம் இல்லை என புரிந்த பிறகு அறிவை தேட துவங்குவீர்கள். தேடல் தொடங்கியதுமே தன்னம்பிக்கை மலர்ந்துவிடும்.

banner

Related Stories

Related Stories