உணர்வோசை

‘நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவர் மீது சுமை ஏற்றினோம்’ – கலைஞர் குறித்து எம்.ஜி.ஆர் வெளியிட்ட தகவல்!

முத்தமிழறிஞர் கலைஞர் 45 வயதில் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அறிஞர் அண்ணாவை இழந்து நின்ற தம்பிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் பாதுகாவலனாக மாறினார்.

‘நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவர் மீது சுமை ஏற்றினோம்’ – கலைஞர் குறித்து எம்.ஜி.ஆர் வெளியிட்ட தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அறிஞர் அண்ணா தனக்கு பிறகு கலைஞர்தான் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்க வேண்டும் என்று உள்ளூர எண்ணம் கொண்டிருந்தார். இதுகுறித்து இனமான பேராசிரியர் க.அன்பழகன், விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தனது வரலாற்று சாட்சியத்தை பதிவு செய்துள்ளார்.

விழுப்புரத்தில் அமர்ந்திருந்த அந்த மாபெரும் கூட்டத்தைப் பார்த்து பேராசிரியர் க. அன்பழகன் சொன்னார்: "தனக்குப் பின் பதவியைக் கலைஞர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அண்ணாவின் விருப்பம்" கலைஞரின் கடுமையான உழைப்பு, அவருடைய எழுத்து, அவரது சேவை, செய்த தியாகங்கள். அவரது கூர்மையான பேச்சாற்றல், இவையெல்லாம் கண்டு, கலைஞர் தமக்குப் பின் ஆட்சிக்கு வருவார் என்பதில் பேரறிஞர் அண்ணாவுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

'ஒரு பொதுக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா பேச வேண்டியிருந்தது. 'நான் முதலில் பேசுகிறேன். ஒரு முக்கியமான அலுவலுக்குச் செல்ல வேண்டி யிருப்பதால்' என்றார் அண்ணா. எனக்கு பிறகு கலைஞர் பேச்சைத் தொடர்வார். இந்த இயக்கத்தின் ஆரம்ப அத்தியாயத்தை எழுதிவிட்டேன். பின்வருபவற்றை அவர் எழுதுவார்' என்றார். புத்திசாலிகள் அண்ணா சூட்சுமமாகச் சொன்னதைப் புரிந்துகொள்வார்கள்.

பேராசிரியரின் பேச்சில் சூட்சுமம் ஏதும் இருக்கவில்லை. 'கலைஞரின் பெயரை மட்டும் அண்ணா குறிப்பிட்டுச் சொல்வானேன்?' என்றார். கூட்டம் ஆமோதிப்புடன் தலையசைத்தது. தன்னுடைய வாரிசாகக் கலைஞரை நினைத்திராவிட்டால் பேரறிஞர் அண்ணா ஏன் அத்தகைய வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்?

பேரறிஞர் அண்ணா காலத்திலேயே கட்சியில் கலைஞரின் செல்வாக்கு பெயர்போனது. அதில் அவர் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாட்டைப் பற்றி நகைச்சுவையாகச் சொல்வார்கள். கலைஞர் ஒரு கட்சித் தொண்டனிடம் தலைகீழாக மூலையில் நில் என்று சொன்னால், தொண்டன் 'ஏன் என்று கேடக மாட்டான். ‘எந்த மூலையில்’ என்று கேட்பான்.

‘நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவர் மீது சுமை ஏற்றினோம்’ – கலைஞர் குறித்து எம்.ஜி.ஆர் வெளியிட்ட தகவல்!

கலைஞரின் அபார நிர்வாகத்திறமையால் எல்லா மாவட்ட செயலாளர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்தார். கட்சியைப் பலப்படுத்தவும் நிதி திரட்டவும் (ஒருமுறை அண்ணாவே எதிர்பாராத அளவு கலைஞர் ரூ.11 லட்சம் நிதி திரட்டியபோது திருவாளர் 11 லட்சம் என்று பொது மேடையில் அண்ணா பாராட்டினார்) தேர்தல் பிரச்சாரம் செய்வதிலும், போராட்டங்களை நடத்துவதிலும் தனது திறமையை காண்பித்திருந்தார்.

தான் எழுதிய நாடகங்களைக் கட்சியின் சார்பாக எல்லா மாவட்டங்களிலும் மேடையேற்றினார். அதில் கிடைத்த வசூலில் கட்சிக்கு எடுத்துக்கொண்டது போக, ஒரு சிறிய தொகையை மாவட்டச் செயலாளர்களுக்கு அவர்களது உழைப்பைப் பாராட்டும் விதமாக அளித்தார்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சியிலிருந்தும், அமைச்சர்கள் சட்ட சபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்தும் தான் முதல்வர் பதவி ஏற்க வேண்டும் என்று அழுத்தம் ஏற்பட்டதாக கலைஞர் 'நெஞ்சுக்கு நீதி'யில் எழுதியிருக்கிறார்.

கட்சியின் 383 பொதுக்குழு உறுப்பினர்களில் 300 உறுப்பினர்களின் வாக்கு பெற்று 1969, பிப்ரவரி 10 அன்று கலைஞர் முதலமைச்சரானார். முதல்வர் பதவிக்கு வர தனக்கு ஏதும் விருப்பமிருக்கவில்லை, மற்றவர்களின் நிர்பந்தத்தினாலேயே பதவி ஏற்றேன் என்று கலைஞர் எழுதியிருக்கிறார்.

கலைஞர் முதலமைச்சர் ஆனபிறகு, அந்த நிகழ்வு எப்படி நடந்தது என்று எம்.ஜி.ஆர் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

“யார் அடுத்த முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று தான் கட்சியின் பெரும்பாலானவர்களைக் கேட்டபோது அவர்கள் எல்லோரும் கலைஞருக்கு ஆதரவு தெரிவித்தார்கள், நானும் கலைஞர்தான் பதவியேற்க வேண்டும் என்றேன். அதற்கு நம் கலைஞரின் பதில் என்னவாக இருந்தது என்று நான் இதுவரை பொதுக்கூட்டத்தில் சொன்னதில்லை. இப்போது சொல்லலாம். என்று நினைக்கிறேன். 'முதல் அமைச்சராக இருக்க எனக்கு விருப்பமில்லை எனக்கு வேண்டாம்' என்றார். அதுமட்டுமல்ல. தம்பி மாறனை அனுப்பி அவருக்கு இதில் விருப்பமில்லை என்ற அதையே சொன்னார்.

கலைஞருடைய மனைவியும் அதை ஏற்க மறுத்தார். அதனால் கலைஞர் இந்தப் பதவியை விரும்பவுமில்லை அதற்காக ஆசைப்படவும் இல்லை. அவர் மக்களின் விருப்பத்திற்கிணங்க முதல்வர் பதவி ஏற்றார். நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவரது தோள்களில் இந்தப் பணியின் சுமையை ஏற்றினோம். திரைப்பட வசனகர்த்தாவாக அவர் இருந்தால் ஆயிரக்கணக்கில் சம்பாதித்திருப்பார். அதைப் புறக்கணித்து மக்களின் நலன் ககுதி பதவி ஏற்றார்" ( ஆதாரம் ஆர்.கண்ணன் எழுதிய எம்.ஜி.ஆர் வாழ்க்கை நூல்)

‘நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவர் மீது சுமை ஏற்றினோம்’ – கலைஞர் குறித்து எம்.ஜி.ஆர் வெளியிட்ட தகவல்!

தொண்டர்களின் விருப்பத்தின்பேரில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற முத்தமிழறிஞர் கலைஞர், அன்றுமுதல் தன் வாழ்நாள் இறுதிவரை தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்தார்.

முதல்முறையாக அவர் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் சீர்திருத்தத் திட்டங்களில் கவனம் செலுத்தினார். மனு நீதி திட்டம் முதலாவதாக அறிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் நேரிடையாக மக்களைச் சந்தித்து அவர்களுடைய புகார் மனுக்களைக் கேட்டு வாங்கி உடனுக்குடன் அதற்குத் தீர்வு வழிசெய்தார்கள்.

1969 செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்குப் பதினைந்து நாட்களுக்குள் லட்சக்கணக்கில் மனுக்கள் குவிந்தன. 90% மேல் புகார்கள் தீர்வு பெற்றன. இந்தத் திட்டத்தால் அதிகாரிகளுக்கு மக்களுடன் நேரிடையான தொடர்பு கிடைத்தது மட்டுமல்ல, அரசை அணுகுவது மக்களுக்கு சரளமாயிற்று.

1970இல் கலைஞர் அரசு மிகத் துணிச்சலோடு உச்ச வரம்பிற்கான அளவை 15 ஏக்கராகக் குறைத்தது. இதன் மூலம் கணிசமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும் சிறு விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பள்ளி இறுதி வகுப்புவரை இருந்த இலவசக் கல்வி புகுமுக வகுப்புவரை ஆனது. சட்டநாதன் ஆணையம் அமைத்த திமுக அரசு, அதன் பரிந்துரையின்பேரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை 31 சதவீதமாக மாற்றியது. தாழ்த்தப்பட்டோருக்கு 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக இடஒதுக்கீடு உயர்த்தி அளிக்கப்பட்டது.

1970 டிசம்பர் 2இல் இந்து அறநிலையத் துறைச் சட்டம் திருத்தப்பட்டு எந்த ஜாதிப் பிரிவினராக இருப்பினும் அவர்கள் திருக்கோயில்களின் வழிபாட்டு முறைகளை முறையாக கற்றுத் தேர்ந்திருப்பின் அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தடையில்லை என்னும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

மாநில உரிமைக்குக் குரல் கொடுக்க 1969இல் அமைந்ததுதான் மத்திய - மாநில உரிமைகளை ஆராய நீதிபதி ராஜமன்னார் கமிட்டி. அதன் தொடர்ச்சியாய் 1970 பிப்ரவரி 22இல் திருச்சியில் ஐம்பெரும் முழக்கங்களைக் கலைஞர் அறிவித்தார். 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம். 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம். 3. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். 4. வன்முறை தவிர்த்து வறுமையை ஒழிப்போம். 5 மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.

இந்த ஐம்பெரும் முழுக்கங்களே திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்றும் வழிநடத்தி வருகின்றன. தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தனித்தன்மைக்கும் இந்த முழக்கங்களே அடித்தளம்.

banner

Related Stories

Related Stories