தமிழ்நாடு

“நவீனத் தமிழகத்தை மட்டுமல்ல, நவீன இந்தியாவையும் உருவாக்கியவர் கலைஞர்” : அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்!

தலைவர் கலைஞர் பற்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சித் தலைவர் கூறிய நினைவலைகள் பற்றி தொகுப்பு!

“நவீனத் தமிழகத்தை மட்டுமல்ல, நவீன இந்தியாவையும் உருவாக்கியவர் கலைஞர்” : அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்!
Gopi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைவர் கலைஞர் பற்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சித் தலைவர் கூறிய நினைவலைகள் பற்றி இந்தத் தொகுப்பில் காண்போம் :-

என்னைப் பிரதமராக்கிட பெரும் பங்காற்றியவர் கலைஞர்!

தமிழகம் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தலைவராக திகழ்ந்தவர் கலைஞர். முன்னாள் பிரதமர், வி.பி.சிங்கிற்கு துணையாக நின்று பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உதவினார். சுயமரியாதை, சமூக நீதியை, அவர் தமது வாழ்க்கை முழுக்கப் பின்பற்றினார்.

1989ல்தான் கூட்டணி ஆட்சி தத்துவம் பலம்பெற்றது. என்னை பிரதமராக்கியதில் கலைஞருக்கு பங்கு உள்ளது. என்னை பிரதமராகிடுமாறு கூறியபோது நான் தயங்கினேன். இருப்பினும், காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத கூட்டணி அரசு அமைந்தது. அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் கலைஞர். எனது அரசுக்கு மட்டுமின்றி, ஐ.கே.குஜ்ரால் அரசு, வாஜ்பாய் அரசு, மன்மோகன்சிங் அரசுகளுக்கும் ஆதரவு அளித்து மத்தியில் 20 வருடங்கள் நிலையான ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர் கலைஞர்.

“நவீனத் தமிழகத்தை மட்டுமல்ல, நவீன இந்தியாவையும் உருவாக்கியவர் கலைஞர்” : அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்!

மு.க.ஸ்டாலின் தனது பொறுப்பை திறம்பட நடத்துவார்!

அவரின் அரசியல் அறிவை எங்களால் மறக்கவே முடியாது. ரயில்வே,நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் என பல துறை வளர்ச்சியிலும் பங்களித்தவர் கலைஞர். தந்தை கலைஞரின் வரலாறு ஸ்டாலினின் தோளில் தூக்கி வைக்கப்பட்டுள்ளது. மாநில கட்சியை துவங்கி நடத்துவதுபெரிய கஷ்டம். எனக்கே சொந்த அனுபவம் உள்ளது. எத்தனை மாநில கட்சிகள் வந்தன, சென்றன என்பது எனக்கு தெரியும். ஸ்டாலின் தனது பொறுப்பை நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று 29.08.2018 அன்று நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்திருந்தார்.

மாநில உரிமைகளுக்காகப் போராடிய மாபெரும் தலைவர் கலைஞர்!

கலைஞர் தமிழுக்காகப் போராடியவர். தமிழ் மக்களுக்காகப் போராடியவர். தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்காகப் போராடியவர். இந்திய நாட்டின் உண்மையான ஜனநாயகத்திற்கும் மாநில உரிமைகளுக்காகவும் போராடிய ஒரு மாபெரும் தலைவர். அவருடைய காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம், வாழ்ந்திருக்கிறோம், அவருடைய வரலாற்றை நாம் அவரோடிருந்து நாம் கற்றிருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் இருக்கிற பெருமை என தெற்கில் உதித்தெழுந்த சூரியன் புகழாஞ்லி நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்திருந்தார்.

“நவீனத் தமிழகத்தை மட்டுமல்ல, நவீன இந்தியாவையும் உருவாக்கியவர் கலைஞர்” : அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்!

நவீனத் இந்தியாவையும் உருவாக்கியவர் கலைஞர்!

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான கலைஞர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்கு மகத்தானது. அவர் நவீன தமிழகத்தை மட்டுமல்ல, நவீனத் இந்தியாவையும் உருவாக்கியவர். அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அவர் நமக்கு விட்டுச்சென்ற பணிகள் ஏராளம். அதை நாம் சுவீகரித்துக் கொண்டு எதிர்கால நமது தலைமுறையின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என என தெற்கில் உதித்தெழுந்த சூரியன் புகழாஞ்லி நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்திருந்தார்.

“நவீனத் தமிழகத்தை மட்டுமல்ல, நவீன இந்தியாவையும் உருவாக்கியவர் கலைஞர்” : அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்!

ஜனநாயகம் - மாநில சுயாட்சியின் தந்தை கலைஞர்!

கலைஞர் அவர்கள் ஜனநாயகத்தின் தந்தை - அனைவருக்காகவும் போராடிய தந்தை. அவர் அனைவரிடமும் அன்பு செலுத்தினார். நீங்கள் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவராகஇருந்தாலும், எந்த மதத்தைச்சேர்ந்தவராக இருந்தாலும் , எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு நாம் அனைவரும் ஒன்றுதான். தம்பி ஸ்டாலிம் அதே கொள்கையைக் கடைப்பிடிப்பார் என நம்புகிறேன் என தெற்கில் உதித்தெழுந்த சூரியன் புகழாஞ்லி நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

banner

Related Stories

Related Stories