உணர்வோசை

சட்டவிரோத லாட்டரியால் அழியும் குடும்பங்கள்... அமைச்சர்களுக்கு ‘செட்டில்மென்ட்’ - கண்டுகொள்ளாத காவல்துறை!?

லாட்டரி சீட்டுகளால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. லாட்டரி விற்பனையை கண்டும் காணாமல் இருப்பதற்காக ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு அவ்வப்போது ‘செட்டில்மென்ட்’ போவதாகவும் கூறப்படுகிறது.

சட்டவிரோத லாட்டரியால் அழியும் குடும்பங்கள்... அமைச்சர்களுக்கு ‘செட்டில்மென்ட்’ - கண்டுகொள்ளாத காவல்துறை!?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஏழை மக்களின் ஆசையைத் தூண்டி அவர்களைக் கடனாளிகளாக்கி, வாழ்க்கையையே சீரழிக்கும் வல்லமை பெற்றவை லாட்டரி சீட்டுகள். இந்தக் கோர ‘அதிர்ஷ்ட’ சீட்டுகளால் தமிழகத்தில் மட்டுமே உருக்குலைந்த குடும்பங்கள் ஆயிரமாயிரம்.

குடி, போதைப் பழக்கங்கள் போல, மனிதர்களை அடிமையாக்கிச் சீரழித்த லாட்டரி சீட்டுகள் தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்யப்பட்டன. ஆனால், தற்போதைய அடிமை அரசின் ஆட்சியில் மற்ற சட்டவிரோத நடவடிக்கைகளின் புழக்கம் அதிகரித்திருப்பதைப் போலவே லாட்டரி சீட்டுகளின் புழக்கமும் வெகுவாக அதிகரித்துள்ளது.

அதுவும், அண்டை மாநில எல்லைக்கருகே அமைந்திருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடையே தான் லாட்டரி புழக்கம் பெருமளவில் காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் இந்த ஓராண்டில் மட்டும் 291 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல லட்சக் கணக்கிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இன்றும் மிக எளிதாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சட்டவிரோத லாட்டரியால் அழியும் குடும்பங்கள்... அமைச்சர்களுக்கு ‘செட்டில்மென்ட்’ - கண்டுகொள்ளாத காவல்துறை!?

விழுப்புரத்தைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி அருண், நகைத் தொழில் நலிவடைந்ததால் 3 நம்பர் லாட்டரிச் சீட்டுகளை வாங்க ஆரம்பித்துள்ளார். 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படும் 3 எண்கள் மட்டுமே கொண்ட இந்த லாட்டரி சீட்டுகளில் பல லட்ச ரூபாய் பரிசு விழும் என விளம்பரம் செய்யப்படுகிறது.

ஆசையூட்டும் விளம்பரங்களை நம்பி லாட்டரிச் சீட்டுகளை வாங்கி கடனாளியான அருண் தனது 3 குழந்தைகளுக்கும் நகை செய்யப் பயன்படுத்தும் சயனைடு விஷத்தை கொடுத்துக் கொன்றிருக்கிறார். அதன்பின் தானும் மனைவியோடு சேர்ந்து சயனைடு குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழக்கும்தருவாயில் அருணின் கதறல் பலரையும் உலுக்கியது. “இனிமேல் என்னால் ஒண்ணுமே பண்ணமுடியாது. நீங்களாவது நிம்மதியா வாழ்ந்துட்டுப் போங்க... விழுப்புரத்துல லாட்டரி சீட்டை ஒழிச்சிடுங்க... 3 நம்பர் லாட்டரி சீட்டை ஒழிச்சிடுங்க... என்னை மாதிரி 10 பேராவது உயிரோட பொழைப்பான்.” எனப் பேசி தன் கைபேசியில் வீடியோ பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு உயிரிழந்தார் அருண்.

சட்டவிரோத லாட்டரியால் அழியும் குடும்பங்கள்... அமைச்சர்களுக்கு ‘செட்டில்மென்ட்’ - கண்டுகொள்ளாத காவல்துறை!?

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் தற்கொலைக்கு காரணமாக கருதப்படும் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இவையெல்லாம் பரபரப்பை ஆற்றுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளே தவிர, அரசு இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதே உண்மை.

லாட்டரி சீட்டுகளால் ஆயிரக்கணக்கான ஏழை அப்பாவித் தொழிலாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படுகிறது. பரிசுத்தொகைக்கு ஏற்ப லாட்டரி சீட்டுகளின் விலையும் இருக்கும். எத்தனை முறை வாங்கி ஏமாந்தாலும், ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா எனும் ஏக்கத்திலேயே தொடர்ந்து தங்கள் அன்றாட உழைப்பை லாட்டரியில் பணயம் வைக்கின்றனர் கூலித் தொழிலாளர்கள்.

சட்டவிரோத லாட்டரியால் அழியும் குடும்பங்கள்... அமைச்சர்களுக்கு ‘செட்டில்மென்ட்’ - கண்டுகொள்ளாத காவல்துறை!?

இதுகுறித்து போலிஸாருக்கு புகார் தெரிவிக்கும் நிலையும் இருப்பதில்லை. ஏனெனில், போலிஸாரே புகார் தெரிவிப்பவர் குறித்த தகவலை லாட்டரி கும்பலுக்குத் தெரிவித்து விடுகின்றனர். பின்னர் லாட்டரி கும்பல், அடியாட்களை வைத்து புகார் கொடுத்தவரை மிரட்டும் நிலையும் உருவாகிறது. இப்படி, போலிஸ் மற்றும் குண்டர்களின் அமோக ஆதரவின்படி தான் லாட்டரி சீட்டு விற்பனையை நடத்துகின்றனர்.

லாட்டரி விற்பனையை கண்டும் காணாமல் இருப்பதற்காக ஆளுங்கட்சி அமைச்சர்கள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை அவ்வப்போது ‘செட்டில்மென்ட்’ போவதாகவும் கூறப்படுகிறது. மக்களுக்கெதிரான திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவது மட்டுமல்லாமல், வாழ்க்கையைச் சீரழிக்கும் வேலையையும் செய்யும் இந்த அரசுக்கு எப்போது முடிவு என்பதுதான் மக்களின் கேள்வி.

banner

Related Stories

Related Stories